விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மற்றொரு பேறு மதியாது,*  அரங்கன் மலரடிக்கு ஆள்- 
    உற்றவரே*  தனக்கு உற்றவராய்க் கொள்ளும் உத்தமனை*
     நற்றவர் போற்றும் இராமாநுசனை*  இந் நானிலத்தே- 
    பெற்றனன்*  பெற்றபின் மாற்றியேன் ஒரு பேதைமையே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மற்று ஒரு பேறு - ப்ரயோஜநாந்தரங்களை;
மதியாது - கணிசியாமல்;
அரங்கன் மலர் அடிக்கு - அழகிய மணவாளனாடைய திருவடித்தாமரைகளுக்கு;
ஆள் உற்றவரே - அடிமை பட்டவர்களையே ;
தனக்கு உற்றவர் ஆ - தமக்கு ஆத்ம பந்துக்களாக;

விளக்க உரை

வேறு எந்தவிதமான தேவதைகளையும் அணுகாமல், அவை மூலம் பெறும் பயன்கள் எதனையும் விரும்பாமல், திருவரங்கத்தை தான் வாசம் செய்யும் இருப்பிடமாகக் கொண்ட பெரியபெருமாளின் திருவடிகளை மட்டுமே சிலர் அண்டியபடி உள்ளனர். இப்படிப்பட்டவர்களை தனது அனைத்து விதமான உறவினர்கள் என்று கொள்ளும் உத்தமராக எம்பெருமானார் உள்ளார். இப்படிப்பட்ட எம்பெருமானாரை அறிவில் சிறந்தவர்கள் – ஸ்ரீமாந் அவிரபூத் பூமௌ ராமானுஜ திவாகர:, ராமானுஜபத அம்போஜ ஸமாச்ரயண சாலிந:, ஸத்யம் ஸத்யம் புந: ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு, ஜயதி லக்ஷ்மணோயம் முனி: வாழி யதிராசன் வாழி யதிராசன் – என்று பலவாறு போற்றியபடி உள்ளனர். இந்த எம்பெருமானாரை, இருள் தரு மா ஞாலம் என்றுள்ள இந்த உலகத்தின் நான் அண்டினேன். இவ்விதமாக அவரை அடைந்த பின்னர், எனது அறியாமை அனைத்தும் எங்கு சென்றது என்பதை நான் அறியவில்லை.

English Translation

Conceding to nothing else, our perfect Ramanuja, king of ascetics, considered only the devotees of Lord Ranganatha's lotus feet as his dear ones. Having received the good fortune of his grace, my heart does not long for anything else.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்