விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உதிப்பன உத்தமர் சிந்தையுள்*  ஒன்னலர் நெஞ்சம்அஞ்சி- 
    கொதித்திட*  மாறி நடப்பன*  கொள்ளைவன் குற்றம்எல்லாம்-
    பதித்த என் புன்கவிப் பாஇனம் பூண்டன பாவுதொல்சீர்* 
    எதித்தலை நாதன்*  இராமானுசன் தன் இணைஅடியே  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒன்னலர் நெஞ்சம் - பிரதிபக்ஷிகளுடைய நெஞ்சானது;
அஞ்சி கொதித்திட - பயப்பட்டுப் பரீதவிக்கும்படி;
மாறி நடப்பன் - மாறிமாறியிட்டு நடக்குந்தன்மையுடையன;
கொள்ளை வன்  குற்றம் எல்லாம் பதித்த - அபாரமான வலிய தோஷங்கள் யாவும் அழுந்திக்கிடக்கிற;
என் புன் கவி - என்னுடைய க்ஷுத்ரமான  கவனமாகிய;

விளக்க உரை

 அனைத்து திசைகளிலும் பரவி உள்ளதாக, முயற்சி செய்து அடையப் பெறாமல் தானாகவே இயற்கையாக அமைந்துள்ள உயர்ந்த திருக்கல்யாண குணங்கள் கொண்டவர் எம்பெருமானார் ஆவார். அருளாளப் பெருமாள் எம்பெருமானார், எம்பார் தொடங்கி எழுநூறு ஜீயர்களின் தலைவராக உள்ளவர் எம்பெருமானார் ஆவார். இவரது திருவடிகள் மிகவும் உயர்ந்தவை ஆகும். எப்படி என்றால் – இந்த ஸம்ஸார உலகில் உள்ள மக்களுடன் ஒன்றாக வாழ்ந்து, அவர்களைக் கரை ஏற்றியபடி உள்ளது; பரதன் போன்ற உயர்ந்தவர்களின் சொற்களை நிராகரித்து எம்பெருமானின் திருவடிகள் கானகம் சென்றன, ஆனால் எம்பெருமானாரின் திருவடிகள் அப்படி அல்லவே! ஆக இவரது திருவடிகளுக்கு ஒப்பான திருவடிகளைக் கொண்டவர்கள் வேறு யாரும் இல்லை என்றானது. மிகவும் உயர்ந்தவர்களின் நெஞ்சங்களில் இந்தத் திருவடிகள் எப்போதும் நீங்காமல் உள்ளன. வேதவேதாந்தங்களைக் குறித்து எதிர்வாதம் செய்பவர்கள் அச்சம் கொள்ளும்விதமாக இவரது திருவடிகள் கம்பீரமாக நடக்கின்றன. அனைத்து வகையான குற்றங்கள் உள்ள என் போன்ற நீசனின் மூலம் வெளிப்பட்டதும், கவிதை கூறும் திறன் அற்ற என் போன்றவன் மூலம் வெளிப்பட்டதும் ஆகிய இந்தப் பாசுரங்களை – “இவை குற்றம் நிறைந்த பாசுரங்கள்”, என்று ஒதுக்காமல், மாலையாக எண்ணி, தன் மீது எம்பெருமானாரின் திருவடிகள் சூடிக்கொண்டன

English Translation

The lotus feet of our lord Ramanuja, king among ascetics of lasting world-fame, are like dawn in the thoughts of the good ones. They boldly frudge int he hearts, of enemies, striking terror. They are receptacles for my inferior poetry, full of flows.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்