விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நெஞ்சில் கறைகொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன்*  நங்கள்- 
    பஞ்சித் திருவடிப் பின்னைதன் காதலன்*  பாதம்நண்ணா- 
    வஞ்சர்க்கு அரிய இராமானுசன் புகழ் அன்றி என்வாய்* 
    கொஞ்சிப் பரவகில்லாது*  என்ன வாழ்வு இன்று கூடியதே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனை - நெஞ்சிலே கல்மிஷத்தையுடை யனாயிருந்த கம்ஸனை;
காய்ந்த - முடித்த;
நிமலன் - ஹேயப்ரத்ய நீகனாய்;
நங்கள் பஞ்சி திருவடி - ஆச்ரிதர்பக்கல் அபிமாநமுடையளாய் பஞ்சு போல் மெல்லிய திருவடிகளையுடையளான;
பின்னைதன் காதலன் - நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபனான கண்ணபிரானாடைய;
 

விளக்க உரை

அசரீரி கூறியதைக் கேட்டுத் தனது மனதில் க்ருஷ்ணன் மீது எப்போதும் விரோதம் கொண்டு கம்ஸன் இருந்தான். இப்படியாக நெஞ்சத்தில் கறை ஒன்றைக் கொண்டிருந்த கம்ஸனை, ஸம்ஹாரம் செய்தவன்; என்னை எம்பெருமானார் திருவடிகளில் பொருந்தி இருக்கும்படி அருளியவன் (நிமலன்); தாழ்வுகளுக்கு எதிர்தட்டாக உள்ளவன் (நிமலன்) ; பஞ்சு போன்ற வெண்மையான திருவடிகளை உடைய நப்பின்னை பிராட்டியின் நாயகன் – இப்படிப்பட்ட கண்ணனின் திருவடிகளை அண்டாமல் உள்ள வஞ்சக நெஞ்சம் படைத்தவர்களால் நெருங்க இயலாமல் உள்ளவர் எம்பெருமானார் ஆவார். என் போன்ற தாழ்ந்தவர்களின் மனதிலும் புகுந்து நிற்கும் எம்பெருமானாரின் உயர்ந்த குணங்கள் தவிர, வேறு எதனையும் உயர்வாகக் கூறி, எனது வாய் துதிக்காது. எனக்குக் கிட்டிய இத்தகைய உயர்ந்த வாழ்க்கையைக் கண்டீர்களா?

English Translation

Ramanuja is hard to get for the ill-minded people who do not worship the petal-soft feet of the pure lord Kirshna, -Dame Nappinal's lover and the evil-hearted Kamsa's killer. Other than his name, my heart sings and prates of none else. O, what a blessing in my life has happened to me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்