விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆரப் பொழில் தென் குருகைப் பிரான்,*  அமுதத் திருவாய்- 
    ஈரத் தமிழின்*  இசை உணர்ந்தோர்கட்கு*  இனியவர்தம்- 
    சீரைப் பயின்று உய்யும் சீலங்கொள் நாதமுனியை*  நெஞ்சால்- 
    வாரிப் பருகும்*  இராமானுசன் என்தன் மாநிதியே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆரம் பொழில் - சந்தனச் சோலைகளையுடைய;
தென் குருகை - அழகிய திருக்குருகூரிலே (அவதரித்த);
பிரான் - மஹோபகாரகரான ஆழ்வாருடைய;
அமுதம் திருவாய் - பரமபோக்யமான திருப்பவளத்தில்பிறந்த;
ஈரம் தமிழன் இசை - ஈரச்சொல்லாகிய திருவாய்மொழியின்  இசையை;

விளக்க உரை

தாமிரபரணியின் நீர்வளத்தால் உயர்ந்து நிற்கும் சந்தன மரங்கள் சூழ்ந்த சோலையினால் சூழப்பட்டது திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரி ஆகும். இத்தகைய திருக்குருகையில் அவதாரம் செய்து, அனைவருக்கும் திருவாய்மொழி அருளி, நாதமுனிகளுக்கு அனைத்தையும் உபதேசம் செய்து, நமது ஸம்ப்ரதாயத்தை வழி நடத்தியவர் நம்மாழ்வார் ஆவார். அத்தகைய நம்மாழ்வாரின் அழகான திருவாயில் பிறந்ததும், னமது ஸம்ஸார தாபம் நீக்கும் ஈரம் உள்ளதும், தமிழ்மொழியில் உள்ள வேதம் போன்றுள்ளதும் திருவாய்மொழியாகும். இப்படிப்பட்ட உயர்ந்த திருவாய்மொழியின் இசையை, அதன் ராகம் போன்றவற்றுடன் அறிந்தவர்களின் குணங்களில் நின்று, அவர்களுடைய திருக்கல்யாண குணங்களை எப்போதும் கூறியபடி உள்ளவர் நாதமுனிகள் ஆவார். இப்படிப்பட்ட நாதமுனிகளை, அவரது குணங்களுடன் அனுபவித்தபடி உள்ளவர் எம்பெருமானார் ஆவார். அப்படிப்பட்ட உடையவர், இந்த உலகில் உள்ள அனைவருக்கும் ஏற்ற செல்வமாக உள்ளபோதிலும், எனக்குக் கிட்டிய பெரியநிதி ஆவார். நவநிதி போன்று ப்ரளயத்தில் அழியக்கூடியது அல்லாமல், எப்போதும் உள்ள மாநிதி ஆவார்.

English Translation

Nathamuni exulted in worshipping the sweet poet Madurakavi, who knew the art of singing the Rasa-laden words of the delightful Tiruvaimoil be queathed by the lord of flower-groves-surrounded southern kurugur king Satakopan. Ramanuja who filled his heart with love for Nathamuni, is our great wealth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்