விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வருத்தும் புறவிருள் மாற்ற,*  எம் பொய்கைப்பிரான் மறையின்- 
    குருத்தின் பொருளையும்*  செந்தமிழ் தன்னையும் கூட்டி*  ஒன்றத்- 
    திரித்தன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுள்ள‌த்தே* 
    இருத்தும் பரமன்*  இராமானுசன் எம் இறையவனே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எரித்த திருவிளக்கை - ஜ்வலிக்கக்செய்த (முதல் திருவந்தாதியாகிற) திருவிளக்கை;
தன் திருஉள்ளத்தே - தமது திருவுள்ளத்தே;
இருத்தும் - வைத்துக்கொண்டிரா நின்ற;
பரமன் இராமாநுசன் எம் இறையவன் - மஹாவைபவசாலியான எம்பெருமானார்;
எம் இறையவன் - நமக்கு ஸ்வாமி;

விளக்க உரை

உரை:1

பகவத்பாகவத விஷயம் அந்தரங்க விஷயமென்றும் சப்தாதி விஷயங்கள் பாஹ்ய விஷயம் (அதாவது-புறவிஷயம்) என்றும் சொல்லப்படும். அந்த பாஹ்ய விஷயங்களைப்பற்றின அஜ்ஞாநாந்தகாதலிலே ஸுகரூபம்போல் தோற்றினாலும் பிறகு மிக்கவருத்தத்தை விளைக்கக்கூடியது; அப்படிப்பட்ட கொடியஇருளை அகற்றுவதற்காகப் பொய்கையாழ்வார் “வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காக” என்று தொடங்கித் திருவந்தாதி திவ்ய ப்ரபந்தமென்னாம் ஒருவிளக்கை எற்றியருளினார். அவ்விளக்குக்கு எதைத் திரியாக்கினார் என்றால், வேதாந்தங்களில் திரண்டுகிடக்கும் ஸாரப்பொருள்களையும் இனிய தமிழ்ச்சொற்களையும் ஒன்று சேர்த்துத் திரித்தார். அப்படிப்பட்ட திருவிளக்கை எம் பெருமானார் தமது திருவுள்ளத்தினாள்ளே எப்போதும் அணையாதபடி ஸ்தாபித்தருளினார்; அவரே அடியேனுக்கு ஸ்வாமி என்றாராயிற்று.

உரை:2

(இது வரை கூறப்பட்ட பாசுரங்கள் அனைத்தும் உபோத்காதம் எனப்படும் முன்னுரை ஆகும். இனி வரும் பாசுரம், மூலம் தனது துதியைத் தொடங்குகிறார்) உலகவிஷயங்களை அடையும் பொருட்டு, “ஆட்டை அறுத்துக் கொடு, உன் தலையை அறுத்துக் கொடு” என்னும் க்ஷூத்ர தேவதைகளையும், மற்ற தேவதைகளையும் ஆராதித்து, அதனால் ஏற்படும் அஜ்ஞானம் என்ற இருளில் முழ்கி பலரும் வருந்துகின்றனர். இத்தகைய அஜ்ஞானம் என்ற இருள் நீங்கும்படியாக, நமக்கு ஏற்ற உபகாரம் செய்தவர் பொய்கையாழ்வார் ஆவார். வேதாந்தத்தின் முழுப் பொருளும் விளங்கும் விதமாகவும், “நடை விளங்கு தமிழ்” என்று போற்றப்படும் அழகான தமிழ் மொழியையும் இணைத்து அவர் செய்த உபகாரம் என்ன? தன்னிடம் சேர்ந்து விடும்படி அவரை அணுகி, ஸர்வேச்வரன் நெருக்கியபோது (முதல் ஆழ்வார்கள் மூவரும் திருக்கோவிலூரில், ஒருவரை ஒருவர் அறியாமல் நிற்க, அவர்களை விளக்கும் விதமாக ஸர்வேச்வரன் அவர்களுக்கு இடையில் புகுந்து நெருக்கி நின்றான்), “வையம் தகளியா” என்ற பாசுரம் மூலம் உயர்ந்த திருவிளக்கை ஏற்றினார். இத்தகைய ஞானம் என்ற திருவிளக்கைத் தனது நெஞ்சத்தில் எப்போதும் ஏற்றி வைத்து, நிலைக்கும் ஆசார்யரான எம்பெருமானார் நமக்கு ஸ்வாமியாக உள்ளார்.

English Translation

Paygao! Alvar blended together the substance of the Veda and the sweetness of Tamil Poetry to light a lamp and dispel the darkness of affliction, Ramanuja placed that lamp in his heart. He is our lord and our master.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்