விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேரியல் நெஞ்சே!  அடிபணிந்தேன் உன்னை*  பேய்ப்பிறவிப்- 
    பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி*  பொருவருஞ்சீர்-
    ஆரியன் செம்மை இராமானுச முனிக்கு அன்புசெய்யும்* 
    சீரிய பேறுடையார்*  அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பேர்இயல் நெஞ்சே! - மிகவும் கம்பீரமான மனமே;
உன்னை அடிபணிந்தேன் - உன்னை வணங்குகின்றேன்; (எதற்காக என்னில்;
பேய் பிறவி - ஆஸுரப் பிறப்பையுடையவர்களான;
பூரியரோடு உள்ள சுற்றம் - நீசர்களோடு (எனக்கு) இருந்த உறவை;
புலர்த்தி - போக்கடித்து;

விளக்க உரை

உரை:1

பரம நீசர்களோடு எனக்கிருந்த ஸம்ஸர்க்கத்தைப் போக்கடித்து, ஒப்பற்ற குணசாலியான எம் பெருமானாருடைய திருவடிகளின் ப்ராவண்யமாகிற பரமபுருஷார்த்தத்தைப் பெற்றுள்ள ஆழ்வான் போல்வாருடைய திருவடிகளின் கீழே என்னைக் கொண்டு சேர்த்த நெஞ்சே! இப்பெருநன்றி புரிந்த உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? “தலையல்லால் கைம்மாறிலேனே” என்றாற் போல உன்னைத் தலையால் வணங்குவதுதவிர வேறோரு கைம்மாறு நான் செய்யகில்லேன் என்றாராயிற்று. பூரியர் = இழிபிறப்பாளர். புலர்த்துதல் - உலாச்செய்தல்; அதாவது போக்கடித்தல்; பொருவு - ஒப்பு.

உரை:2

இந்த உலகில் உள்ள மனிதர்களாக இருந்தாலும் ஒரு சிலர் – அசுர வம்ஸத்தில் பிறவி எடுத்து அறிவற்றுப் போனவர்களுடன் தொடர்பு கொண்டும், அஹங்காரம் போன்றவை நிரம்பியும் உள்ளனர். அவர்களது தொடர்பை, எனது நெஞ்சமே! நீ நீக்கிக் கொண்டாய். மேலும் நீ (நெஞ்சத்தை நீ என்றார்) செய்த உபகாரம் என்ன? “இதுதான் இவரது குணம்” என்று எல்லைப்படுத்திச் சொல்ல இயலாத அளவிற்குத் திருக்கல்யாண குணங்கள் கொண்டவரும்; அனைத்துச் சாஸ்த்ரங்களையும் அறிந்தவரும்; இந்த உலகினருக்கு மட்டும் அல்லாது திருவேங்கடமுடையானுக்கே சங்கு-சக்கரம் அளித்ததால் அவனுக்கும் ஆசார்யனாக உள்ளவரும்; தன்னை அண்டியவர்களின் குற்றத்தைப் பார்த்து அவர்களைக் கைவிடாமல், அவர்கள் நிலைக்குத் தான் இறங்கிவந்து அருளும் தன்மை கொண்டவரும் ஆகிய எம்பெருமானாரிடம் மிகுந்த அன்பும் பக்தியும் வைக்கும் உயர்ந்த பேறு பெற்றவர்கள் பலர் உண்டு. அவர்களது திருவடிகளின் கீழ் என்னை நீ (நெஞ்சம்) சேர்த்து வைத்தாய். எனது நெஞ்சமே! இத்தகைய உயர்ந்த ஸ்வபாவம் உள்ள உன்னை நான் வணங்குவதே உனக்கு நான் செய்யும் கைம்மாறாகும்

English Translation

O Benevolent Heart! cutting as under the cords of association with men of devilish birth, you placed me at the feet of the most worshipful beloved ones of our peerless lord and sage Ramanuja. For this grace, I bow to you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்