விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உச்சியில் எண்ணெயும்*  சுட்டியும் வளையும் உகந்து* 
    எச்சம் பொலிந்தீர்காள்!*  என் செய்வான் பிறர்பேர்இட்டீர்?*
    பிச்சைபுக்குஆகிலும்*  எம்பிரான் திருநாமமே- 
    நச்சுமின்*  நாரணன்*  தம் அன்னை நரகம்புகாள்.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எச்சம் பொழிந்தீர்காள் - ஸந்தாநத்தினால் விளக்குமவர்களே!
உச்சியில் - உச்சியில் (தடவத்தக்க)
எண்ணெயும் - (நெற்றியில் தொங்கும்படி கட்டத்தக்க) சுட்டியையும்
வளையும் - (கையில் அணியத்தக்க) வளையையும்
உகந்து - விரும்பி

விளக்க உரை

ஸந்ததி பெற்றவர்கள் அந்தப் பிரஜைகளுக்கு உடம்பிலணியத் தக்க சில ஆபரணம் முதலியவற்றைப் பெறுவிக்கவேணுமென விரும்பி, அதற்குறுப்பாகப் பிறர் பெயரை இடுவார்கள்; அதனால் ஒரு பயனும் பெறமுடியாது; மேலும் பின்பு நரகாநுபவமாகிற அநர்த்தமும் விளையும். எம்பெருமானது திருநாமத்தை உங்கள் பிரஜைகளுக்கு இட்டால், அதனால் ஒருவகை ஐச்வரியமும் கிடைக்கமாட்டாதென்ற உங்களுக்குக் கருத்தாகில் ஆயிடுக; பிச்சையெடுத்துப் பிழைத்தாகிலும் பகவந்நாமத்தைப் பெணினால் பரலோக வாழ்ச்சிக்குப் பாங்காயிடுமென்று உபதேசித்தவாறு. ஒரு அந்தணன் தன் மகனுக்கு நாமகரண காலத்தில், “ஐச்வரியம் தரவல்லானொருவனுடைய பெயரை இப்பிள்ளைக்கு இடவேணும்” என்றெண்ணிக் ‘குபேரன் பெயரை இடு’ என்றளவிலே, “ஐளிபிளி என்று பேரிட்டழைத்து ஜீவிப்பதிற் காட்டிலும், நாராணன் என்ற திருநாமத்தைச் சாத்திப் பிச்சை புக்காகிலும் ஜீவிக்கவமையும்” என்றார் ஒரு ஆஸ்திகர் என்பதொரு கதை இங்கு அறியத்தக்கது. ஐளிபிளி- குபேரன் பெயர்; ***- என்பது வட மொழிப் பெயர்.)

English Translation

O ladies blessed with progeny! For the love of an oil-bath, a forehead-ornament and a bangle, why do you give them others’ names? Even if you have to live by begging, always prefer the Lord’s names. Narayana’s own mother can never go to Hell.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்