விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தென்னவன் தமர் செப்பம்இலாதார்*  சேவதக்குவார் போலப்புகுந்து* 
    பின்னும் வன்கயிற்றால் பிணித்துஎற்றிப்*  பின்முன்ஆக இழுப்பதன் முன்னம்*
    இன்னவன் இனையான் என்றுசொல்லி*  எண்ணி உள்ளத்து இருள்அறநோக்கி* 
    மன்னவன் மதுசூதனன் என்பார்*  வானகத்துமன்றாடிகள்தாமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செப்பம் இலாதார் - ருஜுவானசெய்கை இல்லாதவர்களான
தென்னவன் - தமர் யமகிங்கரர்கள்
சே அதக்குவார் போல - எருதுகளை அதக்கி ஓட்டுபவர்கள்போல
புகுந்து - வந்து,
பின்னும் - அதற்குமேல்

விளக்க உரை

ஈரநெஞ்ச, இளநெஞ்சு அற்றவர்களான யமகிங்கார்கள், தயாதாக்ஷிண்யமின்றி எருதுகளை அதக்குவார்போலவந்து கட்டியடித்து, செந்நாய்களை இழுத்துக்கொண்டுபோவதுபோலத் தலைகீழாக இழுத்துக்கொண்டு யமலோகத்துக்குப் போம்படியான துர்த்தசை நேரிடுவதற்குமுன்னமே, அந்த யமனுக்கும் தலைவனான எம்பெருமானுடைய ஸ்வரூபஸ்பாவங்களை வாயாற் சொல்லியும் நெஞ்சால் நினைத்தும், இவ்வகைகளாலே அவ்வெம்பெருமாளை ஸாக்ஷத்கரிக்கப்பெற்று, மேலுள்ளகாலத்தையும் திருநாமஸங்கீர்த்தநத்தினாலேயே போக்கவல்லவர், பரமபதம்போய்ச்சேர்ந்து, நித்யஸூரிகளுடைய கைங்கரியத்தைத் தாம் பெறுவதற்கு எம்பெருமான்னோடு மன்றாடப் பெறுவர்கள் என்கிறார்; எனவே, பரமபத ப்ராப்தியில் ஸந்தேஹமில்லை யென்றவாறு தென்னவன் - தக்ஷிணதிக்குக்குத் தலைவன், யமன் செப்பம் - செவ்வை ஏற்றுதல் -அடித்தல் “நாமத்தென்னையனேக தண்டஞ்செய்வதா நிற்பர் நமன்றமர்கள்”. என்பதை நினைக்க (வானகத்துமன்றாடிகள்). மன்றாடுதல்- இரந்துகேட்டடல். “வானகம் மன்றத்து ஆடிகள்”. என இயைத்து, பரமபதத்திலுள்ள நித்ய ஸூரி ஸபையில் ஸஞ்சரிக்கப்பெறுவார்கள் என்று பொருளுரைப்பாருமுளர்.

English Translation

The heartless agents of Yama will enter with heavy ropes, bind and drag you back and forth like herding a buffalo. Before that happens, those who can remember the Lord, his names and his deeds, and utter ‘Madhusudana’, and rid the darkness in their hearts, will be contenders for service in Vaikunta.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்