விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆசைவாய்ச் சென்ற சிந்தையர்ஆகி*  அன்னை அத்தன் என் புத்திரர்பூமி* 
    வாசவார் குழலாள் என்றுமயங்கி*  மாளும்எல்லைக் கண்வாய் திறவாதே*
    கேசவா! புருடோத்தமா! என்றும்*  கேழல்ஆகியகேடிலீ! என்றும்* 
    பேசுவார் அவர் எய்தும் பெருமை*  பேசுவான் புகில் நம்பரம்அன்றே (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆசைவாய் - (தனக்கு) ஆசையுள்ள விதத்திலே
சென்ற - போர்ப் பாரத்த
சிந்தையார் ஆகி - நெஞ்சையுடையாராய் கொண்டு
என் அன்னை - என்னுடைய தாய்
என் அத்தன் - என்னுடைய தகப்பன்

விளக்க உரை

அஹங்காரமமகாரங்களை வளரச்செய்யக் கடவதான ஸம்ஸாரத்தில் ஆழங்காற்பட்டுப் பழுதே பலபகல்களைப் போக்கினாலும், உயிர் முடியுமளவிலாகிலும் அந்தஸம்ஸாரத்தில் நெஞ்சைச்செலுத்தாது எம்பெருமான் திருநாமங்களை வாய்விட்டுச் சொல்லுமவர்கள் மேலுலகத்திற் பெறும் பரிசுகளைச் சொல்லித் தலைக்கட்ட யாம் வல்லரல்லோ மென்கிறார். வாழ்நாள் முழுவதையும் பகவந்நாமஸ்ங்கீர்த்தநத்தாலேயே போக்கினவர்கள் பெறும் பெருமையை எம் பெருமான்றானும் பேசித் தலைக்கட்டவல்லனல்லனென்பது வெளிப்படை “என்றுமயங்கி வாய்திறவாதே மாளுமெல்லைக்கண்” என இயைத்து, அம்மா, அண்ணா, பிள்ளை, பூமி, பெண்டாடி என்று சொன்னதும் மூர்ச்சையடைந்து, அவரகள் பேரைச்சொல்லி யழைக்கவும் மாட்டாமல் மாள்வதற்குள் என்று பொருளுரைப்பாருமளர்.

English Translation

At the time of death, instead of engaging the mind in transient attachments and calling, “O my Mother!”, “My Father!”, “My Son!”, “My Lands” and “My Fragrant-tressed Wife!” there are those who recite “Kesava!”, “Purushottama!”, and “Faultless-one-who-came-as-a-boar!” To speak of the greatness of such men is beyond us.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்