விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொம்பின்ஆர்பொழில்வாய்க்*  குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்*
    செம்பொன்ஆர்மதில்சூழ்*  செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்*
    நம்பனைநரசிங்கனை*  நவின்றுஏத்துவார்களைக் கண்டக்கால்* 
    எம்பிரான் தனசின்னங்கள்*  இவர்இவர்என்றுஆசைகள்தீர்வனே . 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொம்பின் ஆர் - கிளைகளாலே நெருங்கின
பொழில் வாய் - சோலைகளிலே
குயில் இனம் - குயிர்களின் திரள்
கோவிந்தன் - கண்ணபிரானுடைய,
குணம் - சீர்மைகளை

விளக்க உரை

திருக்கோட்டியூர் எம்பெருமானடியார்களை ஸேவிக்கும்போதே ‘அவ்வெம்பெருமான் ஸாத்விகர்களினால் ஸேவிக்கப்படுமவன்’ என்கிற லக்ஷணம் வெளியாமாதலால் ‘இவர்கள் எம்பெருமானது சிறப்பைத் தெரிவிக்கவல்ல சின்னங்கள்’ என்று அநுஸந்தித்து, யான் நெடுநாளாய்க் கொண்டுள்ள பலவகை ஆசைகளையுந் தீர்வேனென்கிறார். பாகவதர்களின் ஸேவை, பகவத் ஸேவையினும் அரிது என்பார் கண்ணடக்கால் என்கிறார். “மெய்யடியார்கள் தம், ஈட்டங்கண்டிடக் கூடுமேல் அதுகாணுங் கண் பயனாவதே” என்ற குலசேகராழ்வார் பாசுரமுங்காண்க. எம்பிரான் தன = தன -தன் அ - ; அ- ஆறனுருபு. சின்னம் -***. இவர் இவர் என்ற இரட்டிப்புக்குக் கருத்து - ஒவ்வொரு பாகவதையும் தனித்தனியே அநுஸந்திக்கை. காணவேணுமென்றும், கிட்ட வெணுமென்றும்-, கூடவே இருக்கவேணுமென்றும் இப்படி ஆசைகள் பலவாதல்பற்றி ஆசைகள் எனப் பன்மையாக் கூறினர். இவ்வகை ஆசைகளெல்லாம், காண்கையொன்றினாலேயே தீருமென்றது- பாகவத ஸேவாமாத் ரத்துக்குள்ள அருமையையுஞ் சிறப்பபையுங் கூறியவாறு.

English Translation

Flocks of koels in well watered groves sing of Govinda’s qualities, and fertile fields surround the grand fortified town of Tirukkottiyur, where devotees praise Narasimha with faith. Whenever I see them, I take them to be representatives of the Lord, and fulfill my yearning.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்