விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குருந்தமொன்றொ சித்தானொடும்சென்று*  கூடிஆடிவிழாச்செய்து* 
    திருந்துநான்மறையோர்*  இராப்பகல்ஏத்தி வாழ்திருக்கோட்டியூர்க்*
    கருந்தடமுகில்வண்ணனைக்*  கடைக்கொண்டு கைதொழும்பத்தர்கள்* 
    இருந்தஊரில்இருக்கும்மானிடர்*  எத்தவங்கள்செய்தார்கொலோ!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நால் மறையோர் - நான்கு வேதங்களையுமோதின ஸ்ரீவைஷ்ணவர்கள்
ஒன்று குருத்தம் - ஒரு குருத்தமரத்தை
ஒசித்தானோடும் - முறித்தருளின கண்ணபிரானை
சென்று கூடி - சென்று சேர்ந்து
ஆடி - (அவனுடைய குணங்களிலே) அவகாஹித்து

விளக்க உரை

திருக்கோட்டியூ ரெம்பெருமான் திருவடிகளில் அன்பு பூண்ட பாகவதர்கள் எழுந்தருளியிருக்கிற திவ்யதேசத்தில் வாஸமும், அரிய பெரிய தளங்களினாற் பெறவேண்டிய பேறு என்பதை வெளியிடுகிறது இப்பாட்டென்க. எம்பெருமா னெழுந்தருளி யிருக்குமிடத்தில் வாஸம் பெறுவதற்கு ஒரு தபஸ்ஸே அமையும்; பாகவதர்களின் நகரத்தில் வாஸம் பெறுமைக்குப் பல தவங்கள் புரியவேணும் என்பதும் தோன்றும்- எத்தவங்கள் என்று பன்மையினால். கண்ணபிரான், யமுனையில் நீராடும் ஆயர் மங்கைகளின் துகிலையெடுத்துக் கொண்டு, அதன் கரையிலுள்ள குருந்தமரத்தின் மேலேறுகிற வழக்கத்தைக் கண்டிருந்தவனும், கம்ஸனால் ஏவப்பட்டவனமான ஒரு அஸுரன், கண்ணனை நலிவதற்காக அக்குருந்த மரத்தை ஆவேசித்துக் கிடந்தான்; அதை அறிந்த கண்ணபிரான் அந்த மரத்தை முறித்துப் போகட்டானென்ற வரலாறு அறிக. திருந்தம் - ஸௌஷவம். கடைகொண்டு= கடை - தாழ்வு; அதை அனுஸர்தித்துக்கொண்டு என்றபடி : “நீசனேன் நிறையொன்றுமிலேன்” என்றாற் போலச் சொல்லுகை. நான்முகன் திருவந்தாதியில். “குறைகொண்டு நான்முகன்” என்ற பாட்டில் “குறைகொண்டு” என்ற பிரயோகத்தை ஒக்கும், இப்பிரயோகமும்; அதுவும் இப்பொருளதே.

English Translation

Scholars of the four Vedas reside in Tirukkottiyur with the Lord who destroyed the Kurundu tree. It is the town where devotees humbly fold their hands before the dark cloud-hued Lord. They mingle and dance festively and praise him night and day. Aho, what penance did men of the world practice, to gain a life in their midst?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்