விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உருப்பிணிநங்கை  தன்னைமீட்பான்*  தொடர்ந்துஓடிச்சென்ற* 
    உருப்பனைஓட்டிக் கொண்டிட்டு*  உறைத்திட்டஉறைப்பன்மலை*
    பொருப்பிடைக்கொன்றைநின்று*  முறிஆழியும்காசும்கொண்டு* 
    விருப்பொடுபொன்வழங்கும்*  வியன்மாலிருஞ்சோலையதே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உருப்பிணி நங்கை தன்னை - ருக்மிணிப் பிராட்டியை
மீட்பான் - கண்ணனுடைய தேரில் நின்றும்) திருப்பிக் கொண்டு போவதற்காக
தொடர்ந்து - (அத்தேரைப்) பின் தொடர்ந்து கொண்டு
ஓடிச் சென்ற - ஓடி வந்த
உருப்பனை - உருப்பன் என்றவனை

விளக்க உரை

இதில் முன்னடிகளில் கூறிய வரலாறு- கீழ் வன்னாகன்றேவியில் மூன்றாம்பாட்டின் உரையில் விவரிக்கப்பட்டது. ருக்மினியின் சமையலுக்கு ருக்மண் என்றும், ருக்மி என்றும் பெயர் வழங்குவர் உறைத்திடுதல்-மாநபங்கம் பண்ணுதல்; ஐங்குடுமியைத் தானிறே. உறைப்பான்- ருக்மிணிப் பிராட்டியைச் சிக்கனக் கைக்கொண்டு, மீட்கவந்த ருக்மனையும் பங்கப்படுத்திவிட்ட மிடுக்கையுடையவனென்றபடி. பின்னடிகளின் கருத்து:- திருவாமலிருஞ்சோலை மலையிலுள்ள கொன்றை மரங்கள், நரம்பும் இதழுமாகப் பூக்களைச் சொரிகின்றமை, முறிந்து பொன் மோதிரங்களையும் பொற்காசுகளையும் வாரிப் பிறர்களுக்குக் கொடுப்பது போன்றுள்ளது என்ற உத்ப்ரேக்ஷையைத் திருவுள்ளத்திற்கொண்டு, உபமேயார்த்தத்தை வெளிப்படையாக அருளிச்செய்யாமல் “தாவி வையங்கொண்டதடந் தாமரைகட்கே” என்றதுபோலக் கூறுகின்றனரென்க. கொன்றைப் பூவிலுள்ள நரம்பும் இதழும்- முறிந்த பொன்மோதிரமும் பொற்காசும்போலே யிருக்கும்படி காண்க.

English Translation

Konral trees standing on the hill of Malirumsolai shed round yellow petals and curved stamens strikingly like generous patrons doling out gold coins and open rings. It is the residence of the Lord who captured Rukma – when he pursued the eloping Rukmini, --and bound him to the floor his chariot, to humiliate him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்