விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மன்னர்மறுக*  மைத்துனன்மார்க்கு ஒருதேரின்மேல்* 
    முன்னங்குநின்று*  மோழைஎழுவித்தவன் மலை* 
    கொன்னவில்கூர்வேற்கோன்*  நெடுமாறன்தென்கூடற்கோன்* 
    தென்னன்கொண்டாடும்*  தென்திருமாலிருஞ்சோலையே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மன்னர் - (குருதேசத்து) அரசர்கள்
மறுக - குடல்குழம்பும்படி
மைத்துணன் மார்க்கு - மைத்துன்ன்மாரான பாண்டவர்களுக்கு (த் துணையாகி)
ஒரு தேரின் மேல் - ஒரு தேரிலே
முன் அங்கு நின்று - முற்புறத்திலே நின்றுகொண்டு

விளக்க உரை

அர்ஜுன்னுடைய தேர்க்குதிரைகள் தண்ணீர்க்கு விடாய்த்து இசைத்தவளவில், அவன்பக்கல் பக்ஷபாதியான கண்ணபிரான், கடிநமான ஸ்தலத்திலும் நீர் நரம்பு அறியவல்லவனாதலால், அங்கு வாருணாஸ்ரத்தைப் பிரயோகித்துக் கீழுள்ளநீரை வெளிக்கிளப்பிக் குதிரைகளைவிட்டு நீரூட்டிப்புரட்டி யெழுப்பிக்கொண்டு போந்து பூட்டிக்கொண்டுவந்து முன்னேநிறுத்த, இதைக்கண்ட மாற்றரசரெல்லாம் அர்ஜுநன்பக்கல் இக்கண்ணனுக்குப் பக்ஷ்பாதமிருந்தபடியென்!, இனி நாம் இவனை வெல்லுகையென்று ஒன்றுண்டோ?‘ என்று குடல்மறுகினமை, முன்னடிகளிற் கூறப்பட்டது. மறுக –மனங் குழம்புகைக்காக. முன்அங்குநின்று – ஸாரத்யம் பண்ணுகைக்கு உரிய இடத்தில் நின்று என்றபடி. மோழை – கீழாறு, எழுவித்தலாவது – மேலெழும்படி. செய்தல். அகஸ்தியமுனிவன் வீற்றிருக்கும் மலய பர்வத்த்திற்சென்று ‘தர்ம்மே நடத்தக்கடவேன்‘ என்று மலயபர்வத்த்தை யெழுதிக் கொடியெடுத்த ‘மலயத்வஜன்‘ என்ற அரசன் தேரேறிக்கங்கைநீராடப் போகாநிற்கச் செய்தே, * மதிதவழ் குடுமியளவிலே சென்றவாறே தேர் வடக்கு ஓடாமல்நிற்க, அவ்வரசன் அவ்விடத்திலே தேரை நிறுத்தி, ‘இங்கே தீர்த்த விசேஷமும் எம்பெருமானும் ஸந்நிதிபண்ணி யிருக்கவேணும்“ என்று நினைத்து இறங்கி ஆராய்ந்து பார்க்க, அவ்விடத்தில் நித்யஸந்நிஹிதரான அழகர் அவ்வரசனை நோக்கி, ‘இவ்வாற்றிலே நீராடு‘ என்று நியமித்தருள, நாமங்கேட்டணர்ந்து நீராட வேண்டுகையால் ‘இவ்வாற்றுக்குப் பெயர் என்?‘ என்று அரசன்கேட்க, ‘முன்பு நாம் உலகளந்தபோது பிரமன் திருவடி விளக்கினகாலத்தில் நம் பாதச் சிலம்பின் நீர் இதிலே தெறித்துச் ‘சிலம்பாறு‘ என்று பெயர்பெற்றது‘ ன்று அழகர் அருளிச்செய்ய, அதுகேட்ட அரசன் அவ்வாற்றில் நீழாடி, கங்காஸ்நாந விருப்பத்தையும் தவிர்த்து அத்திருமாலிருஞ் சோலைமலையிற்றானே பேரன்பு பூண்டிருந்தானென்ற வரலாற்றைத் திருவுள்ளம்பற்றித் “தென்ன்ன் கொண்டாடும்“ என்றருளிச் செய்தார். தென்ன்ன்-தெற்கிலுள்ளான், திசையடியாப் பிறந்த பெயர் இந்த ஜம்பூத்வீபத்தில் தென்திசைக்கண்ணதான பரதகண்டத்தினுள்ளும் தென்கோடியிலுள்ளதாதலால் தென்னாடெனப்படும் பாண்டியநாட்டை ஆளுதல்பற்றி, அவ்வரசனுக்குத் தென்னன் என்று உயிர்மெய் கெட்டு றகரம் னகரமாயிற்று.

English Translation

In the distant past the Lord who drove chariot for the five brothers against the hundred kings shot an arrow on the battle-ground and raised a gurgling spring for Arjuna’s horses. He resides in Malirumsolai where the ancient Nedumaran, killer-sharp spear-wielding king of the South Pandya city of Kudal, Madurai, celebrated his victory.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்