விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏவிற்றுச்செய்வான்*  ஏன்றுஎதிர்ந்துவந்தமல்லரைச்* 
    சாவத்தகர்த்த*  சாந்த‌ணிதோள்சதுரன்மலை*
    ஆவத்தனமென்று*  அமரர்களும்நன்முனிவரும்* 
    சேவித்திருக்கும்*  தென்திருமாலிருஞ்சோலையே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏலிற்று - (சம்ஸன்) ஏவினகாரியங்களை
செய்வான் - செய்து முடிப்பதற்காக
என்று எதிர்த்து வந்த - துணிந்து எதிரிட்டுவந்த
மல்லரை - (சாணுரன் முதலிய) மல்லர்களை
சாவ தகர்த்து - முடியும்படியாக நொக்கினவனும்

விளக்க உரை

கண்ணபிரான், நம்பி மூத்தபிரானுடன் கம்ஸன் மாளிகைக்கு எழுந்தருளும்போது இடைவழியிற் கூனியிட்ட சாந்தை அணிந்துள்ள தனது திருத்தோள்கள் இறையுங் குறியழியாதபடி சாணுரமுஷ்டிகாதி மல்லர்களைப் பொருதழித்தமை, முன்னடிகளிற் கூறியது. கூனி சாந்து சாத்தினவுடனே பெண்கள் கண்ணாலே இலச்சினையிட்டு விடுகையாலே அச்சாந்தின் குறியையழிக்க இவனுக்குத் தரமில்லையாம். “சாவத்தகர்த்த சாந்தணிதோள்” என்ற சொற்சேர்க்கைப்போக்கால் இக்கருத்துத்தோன்றுமென்ப. தேவரும், முனிவரும் தமக்குப் புகலிடமாகக் கொண்டு நித்தியவாஸம் பண்ணுமிடம் திருமாலிருஞ்சோலையென்பது, பின்னடிகளின் கருத்து. ஆவத்தனம் ஆபத்காலங்களுக்கு உதவக்கூடிய பொருள்; இங்கு ஆவத்தனமென்றது அழகரைக் கணிசித்தென்னலாம்.

English Translation

Gods and seers worship the resident of Malirumsolai as their ‘distress fund’. He is the Lord who deftly destroyed the hired wrestlers, with arms that wore the Sandal paste offered by the hunchback.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்