விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மைத்தடங்கண்ணி*  யசோதை வளர்க்கின்ற*
    செய்த்தலை நீல நிறத்துச்*  சிறுப்பிள்ளை*
    நெய்த்தலை நேமியும்*  சங்கும் நிலாவிய* 
    கைத்தலங்கள் வந்து காணீரே* 
    கனங்குழையீர் வந்து காணீரே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மை - மையணிந்த;
தட - பெரிய;
கண்ணி - கண்களையுடைய;
அசோதை - யசோதைப்பிராட்டியாலே;
வளர்க்கின்ற - வளர்க்கப்படுகின்றவனாய்;

விளக்க உரை

உரை:1

கரிய பெரிய திருக்கண்களை உடைய அசோதைப் பிராட்டியார் வளர்க்கின்ற சிறந்த நிலத்திலே மலர்ந்திருக்கும் நீலம் என்ற பெயர் கொண்ட கருநெய்தல் பூவைப் போன்ற நிறத்தைக் கொண்ட சிறு பிள்ளையாம் கண்ணனின் கூரிய முனைகளைக் கொண்ட திருச்சக்கரமும் திருச்சங்கும் என்றும் வீற்றிருக்கும் திருக்கைத்தலங்களைக் காணுங்கள். கனமான காதணிகளையுடைய பெண்களே காணுங்கள்.

உரை:2

கண்ணழகு படைத்த யசோதைப்பிராட்டி பிறர்கையில் காட்டிக் கொடாமல் தானே வைத்தகண் வாங்காமல் ஆதரித்து வளர்ப்பதனால்தான் அவளது கண்ணின் நிறமெல்லாம் கண்ணனது திருமேனியில் ஏறி) திருமேணிநிறம் கறுத்திருக்கின்றதோ! என்று தோன்றும்படியிருக்கிற பிள்ளையென்பது முன்னடிகளின் உட்கருத்து. யசோதைப்பிராட்டிக்குச் சிற்சில மையங்களில் சங்கு சக்கரங்களைக் காட்டுதலால் ‘‘நேமியும் சங்கும் நிலாவிய கைத்தலங்கள்’’ என்றார். அன்றியே, சக்கரரேகையும் சங்கரேகையும் பொருந்திய கைத்தலங்கள் என்றும் கொள்ளலாம். இப்பொருளில் நெய்த்தலை என்ற விசேக்ஷணம் சக்கரத்திற்கு இயற்கை யடைமொழியாகவேணும். கைத்தலத்தில் சங்க சக்ர ரேகைகள் அமைவது மஹாபுருஷலக்ஷணம்.

English Translation

O ladies wearing beautiful ear-rings, come here and see. This dark hued child is a tender blossom in Kajal-lined wide-eyed Yasoda’s garden. These here and hands that hold a sharp discus and conch.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்