விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொல்லாவடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப்*  புணர்முலைவாய்மடுக்க- 
    வல்லானை*  மாமணிவண்ணனை*  மருவும்இடம்நாடுதிரேல்
    பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு*  பௌவம்எறிதுவரை* 
    எல்லாரும் சூழச்சிங்காசனத்தே*  இருந்தானைக்கண்டாருளர்.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புணர்முலை - தன்னில் தான் சேர்ந்திருள்ள (அவளது) முலையிலே
வாய்மடுக்க வல்லான் - (தனது) வாயை வைத்து உண்ணவல்லவனும்
மா மணிவண்ணன் - நீலமணிபோன்ற நிறத்தையுடையவனுமான எம்பெருமான்
மருவும் இடம் - பொருந்தி எழுந்தருளியிருக்குமிடத்தை
நாடுதிர் எல் - தேடுகிறீர்களாகில்

விளக்க உரை

முதலடியிற் குறித்த வரலாறு கீழ்ப்பலவிடங்களிற் கூறப்படுள்ளது. புணர்முலை- விஷத்தோடு புணர்ந்த முலை என்றுமாம்; கண்ணபிரானை வஞ்சனையாற் கொல்ல நினைத்த கம்ஸனால் ஏவப்பட்டு முலையில் விஷத்தைத் தடவிக்கொண்டு தாயுருவமெடுத்து முலைகொடுக்க வந்தவளாம் இவள். வல்லனை, வண்ணனை என்ற இரண்டிடத்தும், ஐ- அசை. (பல்லாயிர மித்யாதி) கண்ணபிரான் நகராஸுர வதஞ்செய்து, அவனாற் கொண்டுபோகப்பட்ட மந்தரகிரியினுடைய சிகரமான ரத்தகிரியிற் பல திசைகளிலிருந்தும் கொணர்ந்து சிறை வைக்கப்பட்டிருந்த தேவஸித்த கந்தர்வாதி கன்னிகைகள் பதினாறாயிரம் பேரையும் தான் மணந்துகொண்டு, அவர்களுந்தானுமாக ஒரு ஸிமஹாஸநத்தி வீற்றிருக்கும்போது ஸ்ரீத்வாரகையிற் கண்டாருண்டு. பதினாறாயிரத்தொரு நூற்றுவார் என்று ஸ்ரீவிஷ்ணுபுராணத்திற் காணப்படுகின்றன. பௌவம்- கடல். துவரை- ... ...... என்ற வடசொற்சிதைவு எல்லாமும்- மற்றுமுள்ள பரிஜாதமெல்லாம் என்றுமாம். சிங்காசனம்- வடசொல்திரிபு.

English Translation

Are you a search of the place of residence of gem-hued Lord who ably placed his lips on the breasts of the fierce ogress and killed her? There are many to saw him ascending his lion throne in coronation surrounded by his sixteen thousand spouses in the ocean-lashed Devarka city.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்