விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாள்தொறும் வீடு இன்றியே*  தொழக் கூடுங்கொல் நல் நுதலீர்* 
    ஆடு உறு தீங் கரும்பும்*  விளை செந்நெலும் ஆகி எங்கும்*
    மாடு உறு பூந் தடம் சேர்*  வயல் சூழ் தண் திருவல்லவாழ்* 
    நீடு உறைகின்ற பிரான்*  நிலம் தாவிய நீள் கழலே?*    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நல் நுதநீர் - அழகிய நெறியையுடைய தோழிகளே!
எங்கும் - எவ்விடத்திலும்
ஆடு உறு தீம் கரும்பும் - ஆலையிலிட்டு ஆடுதற்குரிய இனிமையான கரும்புகளும்
வினை செந்நெலும் ஆகி - முதிர விளைந்த செந்நெறி பயிர்களுமாய்
மாடு உறு பூ தடம் சேர்- பக்கங்களில் நெருங்கிய பூத்த தடாகங்களையுடைத்தாய்

விளக்க உரை

(நாடொறும் வீடின்றியே.) இப்பாட்டில் கண்ணுதல் என்கிறவிளியின் கருத்தாவது- திருவள்ளவாழ் நாதனுக்கு நீங்கள் புருஷகாரம் பண்ணி அவன் இங்கே யெழுந்தருளினால் அவன் திருவடிகளிலே தெண்டனிட்டு அதனால் நெற்றிக்கு அலங்காரமாகப்பெறும் ஸ்ரீபாத ரேணுவையுடையீர்களாக உங்களைக் காண்பேனோ? என்பதாம். ஈட்டு ஸ்ரீஸூந்திய” அவன் வந்த வுபகாரத்துக்கு அவன் திருவடிகளிலே விழுந்து ப்ரணமபாம்ஸுக பரார்த்ய ஸலாடைகளாக உங்களைக் காணவல்லேனோ” என்பதாம். எப்போதும் பக்கபலமாய் அருகிலேயிருக்கிற பூத்த பொய்கைகளோடு சேர்ந்த வயல்சூழ்ந்த ச்ரமஹரமான திருவல்லவாழிலே அநுக்ரஹசீலனாய்க் கொண்டு நித்யவாஸம் பண்ணுகிற எம்பெருமானுடைய ஸெளசீல்யமே வடிவெடுத்த திருவடிகளை இடைவிடாதே தொழும்படியான பாக்கியம் நேருமோவென்கிறான்.

English Translation

O Radiant-forehead Sakhis! The Lord who strode the Earth resides in Tiruvallaval amid marshy fields abounding in flowers where sugarcane sways sweetly and golden paddy ripens filling the Quarters. Alas, when will worship his feet everyday without end?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்