விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காண்பது எஞ்ஞான்றுகொலோ?*  வினையேன் கனிவாய் மடவீர்* 
    பாண் குரல் வண்டினொடு*  பசுந் தென்றலும் ஆகி எங்கும்* 
    சேண் சினை ஓங்கு மரச்*  செழுங் கானல் திருவல்லவாழ்* 
    மாண் குறள் கோலப் பிரான்*  மலர்த் தாமரைப் பாதங்களே?*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கனி காய் மடவீர் - கனிபோன்ற வாயையுடைய தோழிகளே!
எங்கும் - எங்குப்பார்த்தாலும்
பாண் குரல் வண்டினோடு - காளரூபமான மிடற்றோவரவையுடைய உண்டுகளும்
பசுதென்றலும் ஆகி - புதுத்தென்றதுமாய்
சேண் சினை ஓங்கு மரம் - உயர்ந்த பனைகளையுடைந்தாய்க்கொண்டு வளருகிற மாசுகளையுடைய

விளக்க உரை

(காண்பது.) தோழிகளே! நமது வாய் இருக்கும்படியைப் பாருங்கள். என் வாய் வெளுத்து உலர்ந்துகிடக்க, உங்கள் வாய் தாம்பூலமருந்தில் செவ்விபெற்றிருத்தல் தகுதியோ வென்கிற க்ஷேபம் கனிவாய் மடவீர்! என்கிற விளியில் தோன்றும். அன்றைக்கே ஏகம்துக்கம் ஸுகஞ்ச நௌ* என்கிற கணக்கிலே அவர்களுள் தன்னைப்போலேயிருக்கையாலே, நீங்களும் கனிவாய் மடவாராக இருந்தவர்களன்றோ! அங்ஙனே நான் மறுபடியும் காண்பது எப்போதோ வென்கிறோளென்னவுமாம். இக்கருத்தில், முன்னிருந்த தன்மையை விட்டுக் கனிவாய்மடலீரென்பது விளித்ததாகக் கொள்க. நல்லமிடற்றோரையையுடைய வண்டுகளும் இளந்தென்றலும் பொருந்திய சோலைகளால் சூழப்பட்ட திருவாழ்ப்பதியிலே வாமனாவதாக ஸௌந்தர்யத்தை நினைப்பூட்டிக்கொண்டு ஸேவைதந்தருளாநின்ற எம்பெருமானுடைய திருவடித்தாமரைகளை நான் காண்பது என்றைக்கு? நீங்கள் விரைவாகக் கூட்டி வைக்க வேணுமென்றபடி.

English Translation

O Berry-lipped sakhis! This Lord who came as a beautiful manikin resides in fertile Tiruvallavai, where trees grow fall in dense groves blowing fresh breeze and bees made music like harpstrings. Alas! When will this unfortunate self see his blossomed lotus-feet?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்