விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மான் ஏய் நோக்கு நல்லீர்!*  வைகலும் வினையேன் மெலிய* 
    வான் ஆர் வண் கமுகும்*  மது மல்லிகை கமழும்*
    தேன் ஆர் சோலைகள் சூழ்*  திருவல்லவாழ் உறையும்- 
    கோனாரை*  அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?* (2)   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மான் ஏய் நோக்குகல்லீர் - மான் போன்ற நோக்கையுடைய பெண்களே!
வினையேன் - பாவியான நான்
வைகலும் மெலிய -எப்போதும் இளைக்கும்படியாக,
வான் ஆர்வண் சமூகும் - ஆகாசத்தை யளாவிய அழகிய அழகிய பாக்மரங்களும்
மது மல்லிகை- மதுவொழுகுகின்ற மல்லிகை மலர்களும்.
கமழும் - வாஸிக்கப்பெற்ற

விளக்க உரை

(மானேய் நோக்கு.) அழகிய நோக்குடைய தோழிகளே! பிரிந்து வருந்துவதற்கே ஹேதுவான மஹாபாபத்தைப் பண்ணின நான் நாடோறும் வ்யஸாங்களால் மெலிவதற்காகவே நித்யவஸந்தமான சிறந்த பொழில்களால் சூழப்பட்ட திருவல்லவாழிலே நித்யவாஸம் பண்ணாநின்ற ஸ்வாமியின் திருவடிகளிலே சேரப்பெறுவது என்றைக்கோ வென்கிறாள். தலைவியின் அவஸதாவிசேஷத்தைத் தோழிகள் கூர்க்கப் பார்த்துக் கொண்டிருந்ததனால் ‘மானேய் நோக்கு நல்வீர்! என்று விளிக்கப்பட்டார்கள். மெலிய என்கிற வினையெச்சம் ஒரு வினையிலே அந்வயிக்க வேண்டும்; வானார் என்ற விடத்து ‘ஆர்’ என்ற வினையிலே அந்வயிக்கவுமாம், முந்தின பக்ஷத்தில், நான் மெலிவதற்காகவே நமூகுகள் ஆகாசத்தளவம் ஓங்கியிருக்கின்றன வென்கிறாளென்க. பிந்தின பக்ஷத்தில், நான் மெலிவதற்காகவே அவன் திருவல்லவாழிலே உறைகின்றளென்கிறாளென்க.

English Translation

O Fawn-eyed friends, this wretched self wanes day by day. The Lord resides in Tiruvallaval, where Areca trees touch the sky, in nec area fragrance –wafting jasmine gardens and honey-dripping fruit orchards. Alast! When will this devotee-self reach the Lord's feet?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்