விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆரா அமுதே! அடியேன் உடலம்*  நின்பால் அன்பாயே* 
    நீராய் அலைந்து கரைய*  உருக்குகின்ற நெடுமாலே* 
    சீர் ஆர் செந்நெல் கவரி வீசும்*  செழு நீர்த் திருக்குடந்தை* 
    ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்!*  கண்டேன் எம்மானே!* (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆரா அமுதே- எவ்வளவு அநுபவித்தாலும் திருப்தியிறவாத அமுதமாகிய
எம்மானே - எம்பெருமானே!
அடியேன் உடலம் - என்னுடைய சரீரமானது
நின்பால் - உன் திறத்தில்
அன்பு ஆய் ஏ - அன்புதானே வடிவெடுத்ததாகி

விளக்க உரை

(ஆராவமுதே.) இத்திருவாய்மொழியிலே நம் பூருவர்கள் பொரவும் ஈடுபட்டிருப்பர்களாயிற்று. இங்கு ஈட்டில் நம்பிள்ளை அருளிச் செய்வது பாரீர்;- “உத்தரபூமியிலே லோகஸாரங்க மஹாமுனிகள் வர்த்திவாநிற்க, இங்குத்தையானொருவன் அங்கேறச்செல்ல, ‘பிள்ளாய் தக்ஷிணபூமியில் விசேஷமென்?’ என்று கேட்க, ‘திருவாய்மொழி யென்றொரு பிரபந்தமவதரித்து சிஷ்டர்கள் பரிக்ரஹித்துப் போரக் கொண்டாடிக்கொடு போராநின்றார்கள்’ என்ன, ‘அதிலே உனக்குப் போவதொரு சந்தை சொல்லிக்காணாய்’ என்ன, “ஆராவமுதே என்கிற வித்தனையும் எனக்குப்போம்’ என்ன, ‘நாராயணாதி நாமங்கவ் கிடக்க இங்ஙனேயொரு நிர்த்தேச முண்டாவதே! இச்சொல் கடையாடுகிற தேசத்தேறப் போவோம்’ என்று அப்போதே புறப்பட்டுப்போந்தார்.”

English Translation

Insatiable ambrosia! First Lord! My body melts in love for you. You make me weep and toss like restless water. I see your resplendent form in Tirukkudandal, reclining amid fertile waters, fanned by whisks of golden paddy.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்