விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட*  வானவர் கொழுந்தே!*  உலகுக்கு ஓர்- 
    முந்தைத் தாய் தந்தையே!*  முழு ஏழ் உலகும் உண்டாய்!* 
    செந்தொழிலவர் வேத வேள்வி அறாச்*  சிரீவரமங்கலநகர்* 
    அந்தம் இல் புகழாய்!*  அடியேனை அகற்றேலே*.       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வந்தருளி - (பரமபதம் முதலியவற்றை விட்டு) எழுந்தருளி
என்நெஞ்சு - எனது நெஞ்சை
இடம் கொண்ட - இருப்பிடமாகக் கொண்ட
வானவர் கொழுந்தேத - நித்யஸூரிநாதனே!
உலகுக்கு - இவ்வுலகத்துக்கு

விளக்க உரை

(வந்தருளி.) கீழ்ப்பாட்டில் “அடியேன் தொழவந்தருளே” என்றாரே; அர்ச்சாவதாரஸாமதியைக் குலைத்துக் கொண்டு கிரீவரமங்கலநகரிலிருந்து திருக்குருகூரிலே திருப்புளியடியிலே வந்து காட்சி தர வேணுமென்றாயிற்று. ஆழ்வாருடைய கோரிக்கை; அங்ஙனே வரக்காணாமையாலே ‘உபேக்ஷித்தான் போலும்’ என்றஞ்சி “பிரானே! என்னை உபேக்ஷியாதொழியவேணும்” என்கிறார். பாசுரம் தொடங்கும்போதே ‘வந்தருளி’ என்றிருக்கின்றபடியாலே உபேக்ஷித்தானென்று நினைப்பது எங்ஙனே பொருந்தும்; என்னில்; கீழ்ப்பாட்டிலே அபேக்ஷித்தபடியே வந்தருளினபடியைச் சொல்லுகிறதன்று இது, “வடதடமும் வைகுந்தமும் மதிள்நுவாரபதியும் இடவகைகளிகழ்ந்திட்ட என் பாலிடவகை கொண்டனையே” என்னுமாபோலே பரமபதம் முதலானவிடங்களைவிட்டுத் தம் ஹ்ருதயத்திலே வந்து குடிகொண்டிருக்கிறபடியைச் சொன்னவித்தனை. “வந்தருளி யென்னஞ்சிடங்கொண்ட” என்கிறவிடத்திலே நம் பிள்ளையிட்டு ஹஸூதிபரமபோக்யமானது. அது வருமாறு:- “பட்டர் ஸ்ரீபுஷ்பயாகம் அணிந்தானவாறே நஞ்சயரைப் பலகாலும் இயல்கேட்டருளுவர்; ஒரு கோடையிலே திருவீதியிலே நீரைவிட்டு எழுந்தருளியிருந்து இப்பாட்டை இயல் சொல்லுமென்று ஜீயரை அருளிச்செய்து தாம் இத்தை அதுஸந்திருந்து அநநிதரத்தே தாமும் இப்பாட்டை இயல்சொல்லி ‘யமநிதமாதி க்ரமத்தாலே யெவ்ய வஸ்துவை மநநம் பண்ணிப் புறம்புள்ள பராக்வகயறுத்து அநஸந்திக்கப்புக்காலும் அக்காள் பால்போலேயிருக்கக் கடவ நெஞ்சுகள் பதஞ்செய்யும்படி, தார்மிகராயிருப்பார் இவை சில ஈரச்சொற்களைப் பொகட்டுப் போவதே!” என்றருளிச் செய்தார்; நஞ்சீயர் இவ்வார்த்தையை உருத்தோறு மருளிச்செய்வர் என்றருளிச்செய்வர்.”

English Translation

O Lord of celestials, through grace, you have enteed my heart, O Lord of eternal glory, First-cause of the Universe. Father, Mother, Swallower-of-the-seven-worlds. O Resident of Sivaramangala-nagar, where godly men perform Vedic sacrifice endlessly, pray do not forsake me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்