விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொலையானைக் கொம்பு பறித்துக்*  கூடலர் சேனை பொருது அழியச்* 
    சிலையால் மராமரம் எய்த தேவனைச்*  சிக்கென நாடுதிரேல்*
    தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று*  தடவரை கொண்டு அடைப்ப* 
    அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை*  அங்குத்தைக் கண்டார் உளர் 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சேனை - சேனையானது
அழிய - அழியும்படி
பொருது - போர் செய்தவனும்,
சிலையால் - வில்லாலே
மராமரம் - ஸப்தஸாலவருக்ஷர்களை

விளக்க உரை

கண்ணபிரானை நலியக் கம்ஸனால் ஏவப்பட்ட குவலயாபீடமென்ற மதகரியை முடித்தவனம், ஜாஸ்தாக வாஸிகளான கரததூஷணாதி ராக்ஷஸர்களைக் கொன்றவனும், ஸுக்ரீவ மஹாராஜனுக்குத் தன் திறலைக் காட்டுவதற்காக, ரிச்ய முகபர்வதத்தில் நின்ற ஏழு ஆச்சாமரங்களை வில்லிட்டுச் சாய்த்தவனுமான எம்பெருமானைத் தேடுகின்றமை, முன்னோடிகளில் தோன்றும். லங்கைக்குச் செல்வதற்காகக் கடலிடையில் ஸேதுகட்டுகைக்கு, வாநரவீரர்கள் மலைகளைக் கிரஸாஹித்துக்கொண்டு சென்று, அவற்றால் கடலை ஊடறுத்து அணைகட்டா நிற்க இராமன் அவ்வாறு அவைசெய்கின்ற அடிமையைப் பார்த்து உகந்து கொண்டு அக்கடற்கரையிலே வீற்றிருக்கக் கண்டாருளர் என்பது, பின்னடி. கூடலர் - கூடமாட்டாதவர்; எனவே, சத்ருக்களாயினர்: ஸந்தர்ப்பம் நோக்கி, ஜநஸ்தாக வாஸிகளெனக் கொள்ளப்படட்து; “மராமரமெய்த தேவனை” என்றிறே உடன் கூறியது. அவ்வரலாறு வருமாறு:- ராமலக்ஷ்மணர்க்கும் ஸுக்ரீவனுக்கும் திருவடி மூலமாகத் தோழமை நேர்ந்தபின்பு, ஸுக்ரீவன் தன் வருத்தத்திற்குக் காரணங்களைக் கூற, அதுகேட்ட இராமபிரான், ‘நான் உனது பகைவனை எனது அம்பினால் அழித்து விடுகிறேன், அஞ்சாதே’ என்று அபயப்ரதாகஞ் செய்யவும் ஸுக்ரீவன் மனந்தெளியாமல் வாலியின் பேராற்றலைப் பற்றி பலவாறு சொல்லி, முடிவில், வாலி மராமரங்களைகத் துளைத்ததையும், துத்துபியின் உடலெலும்பை ஒரு யோஜனை தூரந் தூக்கியெறிந்ததையும் குறித்துப் பாராட்டிக் கூறி, “இவ்வாறு பேராற்றலமைந்தவனை வெல்வது கூடுமோ?’ என்று சொல்ல. அது கேட்ட இளையபெருமாள் ‘உனக்கு நம்புதல் இல்லையாயின் இப்போது என்ன செய்ய வேண்டுவது?’ என்னது ஸுக்ரீவன்; ‘இராமபிரான் நீறுபூத்த நெருப்புப்போல தோன்றினும் வாலியின் வல்லமையை நினைக்கும்போது சங்கையுண்டாகின்றது; ஏழு மராமரங்களையும் துளைத்து இந்தத் துந்துபியின் எலும்பையும் இருநூறு விரற்கிடைதூரம் தூக்கியெறிந்தால் எனக்கு விசுவாஸம் பிறக்கும்’ என்று சொல்ல, இராமபிரான் அதற்கு இயைந்து, துந்துபியின் உடலெலும்புக் குவியலைத் தனது காற்கட்டை விரலினால் இலேசாய்த் தூக்கிப் பத்து யோசனை தூரத்திற்கு அப்பால் எறிய, அதனைக் கண்ட ஸுக்ரீவன் ‘முன்பு உலராதிருக்கையில் வாலி இதனைத் தூக்கியெறிந்தான்; இப்போது உலர்ந்துவிட்ட இதனைத் தூக்கியெறிதல் ஒரு சிறப்பன்று’ என்று கூற, பின்பு இராமபிரான் ஒரு பாணத்தை ஏழு மராமரங்களின் மேல் ஏவ, அது அம்மரங்களைத் துளைத்ததோடு ஏழுலகங்களையும் துளைத்துச் சென்று மீண்டும் அம்பறாத்தூணியை அடைந்ததென்பதாம். சிலையால்- வில்லினால் ஏவப்படட் அம்பினால் எனக் கொள்ளலாம். (சிக்கன நாடுதிரேல்) குவலயாபீடத்தின் கொம்பைப் பறித்த வயக்தி வேறு, மராமரங்களைத் துளைத்த வ்யாக்தி வேறு என்று பிரித்து ப்ரதிபத்தி பண்ணாமல், தர்ம ஒன்று என்றே அத்யவஸித்து அவனிருந்தவிடந் தேடுகிறீர்களாகில் என்றபடி. குரங்கு + இனம், குரங்கினம். அங்குத்தை- அங்கு என்றபடி. ‘கிக்கன’ எனினும், ‘சிக்கென’ எனினும் ஒக்கும்.

English Translation

Are you instantly search of the Lord Who plucked the tusk of the deadly elephant, wiped out the Rakshasa army and pierced an arrow through seven trees in a row? When monkeys in hordes carrying huge rocks on their on their heads went and built a bridge across the ocean, there are many who saw him sitting on the shore lashed by the sea.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்