விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும்*  உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்* 
    உரைக்கின்ற அமரரும் யானே என்னும்*  உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்*
    உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்*  உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ?,
    உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?  உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முக் கண்பிரான் யானே என்னும் - ஈச்வரனாகச் சொல்லப்படுகிற சிவபிரான் நானே யென்கிறாள்.
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும் - ப்ரஸித்தனான பிரமனும் நானே யென்கிறாள்;
உரைக்கின்ற அமரரும் யானே என்னும் - பேசுகின்ற தேவர்களும் யானே யென்கிறாள்;
உரைக்கின்ற அமரர்கோன் யாயே என்னும் - ப்ரஸித்தனான தேவேந்திரனும் நானே யென்கிறாள்;
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும் - ப்ரஸித்தர்களான நாரதாதிமஹரிஷிகளும் நானே யென்கிறாள்;

விளக்க உரை

(உரைக்கின்ற.) முக்கட்பிரான் யானே, திசைமுகன் யானே, அமரரும் யானே, அமரர்கோன் யானே, முனிவரும் யானே என்கிறவிது அத்வைத வாதமன்று; முதல் திருவாய்மொழிதன்னிலே விசிஷ்டடாத்வைத ஸித்தாந்தத்தை நன்குவிளக்கியருளின பரம வைதிகாரகையாலே இவர் அத்வைதவாதம் பண்ண ப்ரஸந்தியில்லை; பட்டர் ஸ்ரீரங்கரானுஸ்வத்திலே *** என்கிற ச்லோகத்தாலே நிஷ்கர்ஷித்த கட்டளை இங்க உணரத்தக்கது. முக்கண்ணன் முதலானாரை நிர்வஹிப்பவன் எம்பெருமானேயன்றவாறு. திசைமுகன் = கிழக்கு தெற்கு மேற்கு வடக்காகிற நான்கு திசைகளிலும் முகமுடையவன் என்றவாறு, அன்றியே, திசை என்னுஞ்சொல் நான்கு என்கிற எண்ணைக் காட்டிற்றாய் நான்முகன் அன்றவாறுமாம். உரைக்கின்ற முகில்வண்ணன் = ‘உரைக்கின்ற’ என்ற அடைமொழி முகிலுக்கும் ஆகலாம்; வார்த்தை சொல்லுவதொரு மேகம்போன்றவளன் என்ற இல்பொருளுவமை.

English Translation

The things my tender sapling says! "Speak ye of the three-eyed Lord? He is me; the four-headed Lord is me, the celestials too are me, The Lord of celestials is me; the sages too are but me" Has the cloud-hued Lord taken her? O Talkative people of the world, what can I say?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்