விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்*  செய்வான் நின்றனகளும் யானே என்னும்* 
    செய்து முன் இறந்தவும் யானே என்னும்*  செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்*
    செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்*  செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ?*
    செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்*  செய்ய கனி வாய் இள மான் திறத்தே?*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செய்கின்ற திதி எல்லாம் யானே என்னும் - நிகழ்காலச் செய்கைகளெல்லாம் யானே யென்கிறாள்;
செய்வான் நின்றனகளும் யானே என்னும் - எதிர்காலச் செய்கைகளெல்லாம் யானே யென்கிறாள்;
செய்து முன் இறந்தவும் வானே என்னும் - இறந்தகாலச் செய்கைகளெல்லாமும் யானே யென்கிறாள்;
செய்கை பயன் உண்பேனும் யானே என்னும் - செய்கைகளின் பலன் களையனுபவிப்பதும் யானே யென்கிறாள்;
செய்வார்களை செய்வேனும் யானே என்னும் - செய்கைகளைச் செய்கின்ற கர்த்தாக்களைப் படைப்பதும் யானே யெனன்கிறாள்; (இவள் இப்படி யெல்லாம் சொல்லுவது)

விளக்க உரை

(செய்கின்ற கிதி.) நிகழ்ந்தாலும் எதிர்காலம் இறந்தகாலம் என்று காலம் மூவகைப்படும். இம்மூன்று காலங்களிலும் பலபல காரியங்கள் நடந்திருக்கின்றன. கடந்து கொண்டிருக்கின்றன. நடக்கப்போகின்றன; அவையெல்லாம் எம்பெருமானிட்ட வழக்கேயாதலால் அது சொல்லப்பட்டது. (செய்கைப் பயனுண்பேனும் யானே.) = அஹம் ஹி ஸர்வஜ்ஞாநகரம் போந்தா* என்று கீதையிலருளிச் செய்தபடியே அந்தநட்த கருமங்களாகிற பலனை புஜிப்பவன் (அதாவது, அந்தந்த கருமங்களினால் ஆராதிக்கப்படுகிறவன்) எம் பெருமானே. “செய்கைப்பயன்” என்பதை ஒரு சொல்வடிவமாகக் கொள்ளாமல், செய்கையும், பயனுண்பேனும் என்று பிரித்துக் கூறுதலுமுண்டு; ஈடு ;- “அன்றிக்கே, செய்கையாகிற க்ரியையும் **• காவும் நாளிட்ட வழக்கு என்னா நின்றாள்.” (செய்வார்களைச் செய்வேனும் யானே.) அந்தந்த க்ரியைகளை அனுட்டிக்கின்ற கர்த்தாக்களைப் படைப்பவனும் எம்பெருமானே. இப்படிப்பட்ட எம்பெருமான் நானே யென்று இவன் சொல்லுவது (செய்ய கமலக்கண்ணனேறக் கொலோ) செந்தாமரைக் கண்ணனான ஸர்வேச்வரன் வந்து ஆவேசித்ததனாலோ?

English Translation

The things my red-lipped daughter says! "All that is being done is me; all that remains undone is me; all that has been done is also me. I enjoy the fruit of all action; motivation too is me". Has the lotus-eyed Lord possessed her? O Fair people of the world, what can I say?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்