விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நாந்தகம்சங்குதண்டு*  நாணொலிச்சார்ங்கம் திருச்சக்கரம்* 
    ஏந்துபெருமை இராமனை*  இருக்குமிடம் நாடுதிரேல்*
    காந்தள் முகிழ்விரல் சீதைக்காகிக்*  கடுஞ்சிலை சென்றிறுக்க* 
    வேந்தர்தலைவன் சனகராசன்தன்*  வேள்வியில் கண்டாருளர். 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாந்தகம் - நந்தகம் என்னும் வாளையும்
சங்கு - ஸ்ரீபாஞ்ச ஐக்யத்தையும்
தண்டு - கௌமோதகி என்னும் கதையையும்
நாண் ஒலி - நாண் கோஷத்தையுடைய
சார்ங்கம் - ஸ்ரீசார்ங்க ததுஸ்னையும்

விளக்க உரை

பஞ்சாயுதங்களைத் திருக்கையிற் கொள்ளும் பெருமை பொருந்திய பெருமாளைத் தேடுகின்றமை முன்னடிகளில் விளங்கும். ஜநகமஹாராஜன் கந்யாசுல்கமாக வைத்து ருத்ரதநுஸ்ஸை அவனது யஜ்ஞவாடத்தேறவந்து முறிக்கும்போது அப்பெருமானைக் கண்டாருண்டென்பது, பின்னடி நாந்தகம்.கட்டல் விகாரம், இராமனை- ஐ- அசை, செங்காந்தளரும்பு - விரல்களின் செம்மைக்கு உவமையென்க. ஆதி- ஆக என்னும் எச்சரித்திரிபு

English Translation

Are you in search of the abode of Rama of matchless fame, wielding the conch, discus, mace, dagger, and bow? There are many who saw him break the great bow for the sake of petal soft-fingers Sita, in the great sacrifice of Emperor Janaka.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்