விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும்*  கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்* 
    கற்கும் கல்விச் செய்வேனும் யானே என்னும்*  கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்* 
    கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்*  கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?*
    கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன்*  கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே?*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும் - கற்கப்படுகிற கல்விகளை நானே உண்டாக்கினேனென்கிறாள்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும் - கற்கப்படுகிற கல்விகளை (ஸம்ஹார காலத்தில்) முடித்து நானே என்னெஞ்சிலிட்டு வைத்துக் கொண்டிருக்கிறனென்கிறாள்;
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறகொலோ - கற்கும் கல்விகளால் பிரதிபாதிக்கப்படுகிற எம்பெருமான் வந்து? ஆவேசித்ததனாலோ? (அறியேன்.
கற்கும் கல்வியிர்க்கு - இனிக் கற்க வேண்டும் கல்விகளையுடையிரான உங்களுக்கு

விளக்க உரை

(கற்குங் கல்விக்கு.) கண்ணபிரான் ஸாந்தீபிரி பக்கலிலே அறுபத்தினான்கு நாளில் எல்லையிலாத நூல்களையெல்லாம் அதிகரித்ததனாதலலால் அதைச் சொல்லிற்றாக கொள்ளலாம். ***- = என்கிறபடியே வேதங்களுக்கும் நிலமல்லாதபடி நின்றமையைச் சொல்லிற்றாகவுமாம். (கற்குங்கல்லியாவேணும்.) ஸகலவேதஸ்வரூயாகவே எம்பெருமானுளனாதல் அறிக. (கற்குங்கல்வி செய்யவேணும்.) அந்தந்த காலங்களிலே அந்தந்த வித்யைகளை ப்ரவசம் செய்பவனும் எம்பெருமானே. (கற்குங்கல்வி தீர்ப்பேனும்) தீர்க்கையாவது தீர்மானிக்கை; உண்மையான அர்த்தங்களை நிர்ணயிக்கை ஸகலாள்த்ரார்த்த நிஷ்கர்ஷம் பண்ணுகிற ஆசார்யர்களும் ஸர்வேச்வரனேயாவன். ஸம்ஹாரகாலத்திலே ஸகல சாஸ்திரங்களையும் தன்னுடைய திருவுள்ளத்திலே இட்டு வைத்துக்கொண்டிருக்கும்படியைச் சொன்னதாகவுமாம். (கற்குங் கல்விச்சாரமும்.) பரக்க எத்தனை கல்விகள் கற்றாலும் அதற்கு ஸாரமான பலன் எம்பெருமானை யறிவதேயாதலால் கற்குங் கல்விச்சாரம் எம்பெருமானேயாகத்தட்டில்லை. இனி கற்குற் கல்விச்சாரமென்று திருவஷ்டாக்ஷரமஹாமந்த்ரத்தைச் சொல்லிற்றாய்; அந்த மந்த்ரஸ்வரூபியாயிருப்வன் எம்பெருமான் என்றதாகவுமாம். ஆக இப்படிப்பட்ட எம்பெருமான் நானே என்று பாரங்குசநாயகி சொல்லுகிறவிது. (கற்குங் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ) ஸகலவித்யா வேத்யனான ஸர்வேச்வரன் வந்து ஆவேசித்ததனாலோ!

English Translation

My daughter recites, "I am beyond the boundaries of knowledge, I am that knowledge, I generate that knowledge, Has the knowledge –Lord descended on her? O knowledgeable people, what can I say.?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்