விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்*  கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்* 
    கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்*  கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்*
    கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்*  கடல் ஞாலம் ஈசன் வந்து ஏறக்கொலோ?*
    கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்*  கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே?*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கடல் ஞாலத்து என் மகள் - கடல்சூழ்ந்த வுலகத்திலுள்ளவரான எனது பெண்பிள்ளை.
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் - கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைப் படைத்தவளும் நானேயென்கிறாள்;
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னம் - (படைக்கப்பட்ட) கடல் ஞாலத்திலே அநுப்ரவேசித்திருப்பவளும்! நானேயென்கிறாள்;
கடல் ஞானம் கொண்டேனும் யானே என்றும் - (மஹாபலியிடத்தில்) கடல் ஞானத்தை இரந்து பெற்றுக் கொண்டவளும் நானே யென்கிறாள்.
கடல் ஞானம் கீண்டேனும் என்னும் - (மஹாவரஹமாகிக்) கடல் ஞானத்தை உத்தரித்தகளும் நானே யென்கிறாள்;

விளக்க உரை

(கடல் ஞாலம்.) கடல் சூழ்ந்த ஞாலம் முழுவதையும் படைத்தவன் பகவானேயாவன்; சந்தோக்யி உபநிஷத்தில் **** = என்று ஓதிக்கிடக்கிறவிடத்தில்** என்றும் அம்மூன்றாலும் மூவகைக் காரணங்களும் எம்பெருமானே யென்கிறது என்று கொள்ளவேணும். வேறொரு உபாதாக வஸ்து இல்லாமல் தானே உபாநதாந காரணபூதனாய், வேறொரு உபாதாந வஸ்து இல்லாமல் தானே உபநதாந காரணபூதனாய், வேறொரு ஸஹகாரி காரணமில்லமல் அதுவும் தானேயாய், வேறொரு நிமித்தகாரணமில்லாமல் அதுவும் தானேயாயிருப்பவன் என்பதையே அந்த உபநிஷத் வாக்கியம் தெரிவிக்கும். இங்கு யானே என்கறி ஏகாரத்தினால் அவ்வர்த்தமே தெரிவிக்கப்பட்டதாகும். மூவகைக் காரணமுமாயிருந்துகொண்டு ப்ரபஞ்சஸ்ருஷ்டியை பண்ணினது நானே யென்கிறாள். கடல் ஞானமாவேனும் யானே = உலகத்தில் ஒருவன் ஒரு வஸ்துவைப் படைத்தால் படைத்தவனுடைய பெயர் வேறாய், படைக்கப்பட்ட பொருளின் பெயர் வேறாயிருக்கக் காண்கிறோம். எம்பெருமானளவில் வந்தால் அப்படியன்று; படைக்கப்பட்ட ஒவ்வொரு வஸ்துவினும் தான் அநுப்ரவேசித்தே நாமரூபங்களை உண்டாக்கியிருப்பதனால் அன்வோவஸ்துக்களைச் சொல்லும் சொற்கள் தன்னளவும் வந்து வலிக்கும்படி அவையாய் நிற்பவனும் தானே யாதலால் கடல் ஞானமாவானும் எம்பெருமானேயாவன். வேதாந்திகள் அபர்யவஸாக வ்ருத்தியென்பர்; அது இங்கு அறியத்தக்கது. இப்படிக் கடல் சூழ்ந்த வுலகஸ்தவசூபியாயிருப்பதும் நானே யென்கிறாள்.

English Translation

My daughter roams the Earth reciting; "I made this Earth: I am the Earth and the ocean; it was I who took the Earth; it was I who lifted the Earth: it was i who swallowed the Earth". Has the Lord of the Earth and ocean possessed her? O People of the Earth, how can I make you understand?.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்