விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முன் நின்றாய் என்று தோழிமார்களும்*  அன்னையரும் முனிதிர்* 
    மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்*
    சென்னி நீள்முடி ஆதிஆய*  உலப்பு இல் அணிகலத்தன்* 
    கன்னல் பால் அமுதுஆகி வந்து*  என் நெஞ்சம் கழியானே*.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சென்னி - திருமுடியிலே
நீள் - நீண்டு தோன்றுகிற
முடி ஆதி ஆய - திருவபிக்ஷேகம் முதலாகவுள்ள
உவம்பு இல் - எண்ணிறந்த
அணி கலத்தன் - சேர்த்தியழகு போருந்திய திருவாபரணங்களையுடைய அப்பெருமான்

விளக்க உரை

(முன்னின்றா யென்று.) மகளிர்க்கு நாணமே பெருஞ்செல்வமாதலால் ஒருவர் கண்ணிலும் புலப்படாமே மறைந்து நிற்கை முறைமையாயிருக்க, இப்பெண்பிள்ளை பலருங்காண முன்னிற்கையாவதென்? என்று தோழியரும் அன்னையரும் சிறுபாறென்றிருப்பது கண்ட தலைவியுரைக்கின்றாள்; *செங்கமச் சுழலில் சிற்றிதழ்போல் விரலில் நேர்திகழாழிகளுங் கிண்கிணியும் அரையில் தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின் பூவோடு பொன்மணியும் மோதரமும் கிறியும் மங்கல வைப்படையும் தோள்வளையுங் குழையும் மகரமும் வாளிகளும் கட்டியுமென்னும்படியான திவ்யாபரணங்கள் திருக்குறுங்குடி நம்பியினுடையவை என்னெஞ்சைவிட்டு இறைப் பொழுதுமகலாமல் முன்னே தோன்றா நிற்க. நான் பின்னே நிற்பது எங்ஙனம்? நாண்மடமச்சமெல்லாம் பெயர்ந்துபோம்படி அவை என்னெஞ்சை ஆக்கிரமித்த பின்பு நாண் நாணங் காத்திருக்கவொண்ணுமோ வென்றாளாயிற்று

English Translation

Ladies! Sisters! you blame me saying, "You are a disgrace" After I saw the Lord of Tirukkurungudi, -sweet as milk and sugar,-surrounded by strongly built houses, his tall crown and his countless jewels never leave my heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்