விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கதிர் ஆயிரம் இரவி*  கலந்து எறித்தால் ஒத்த நீள்முடியன்* 
    எதிர் இல் பெருமை இராமனை*  இருக்கும் இடம் நாடுதிரேல்*
    அதிரும் கழற் பொரு தோள்*  இரணியன் ஆகம் பிளந்து*  அரியாய்- 
    உதிரம் அளைந்த கையோடு இருந்தானை*  உள்ளவா கண்டார் உளர் (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கதிர் - (எண்ணிறந்த) கிரணங்களையுடைய
ஆயிரம் இரவி - ஆயிரம் ஆதித்யர்கள்
தறித்தால் ஒத்தத - ஜ்வலித்தாற்போல் (மிகவும் பளபளவா நின்றுள்ள)
நீள் முடியன் - நீண்ட திருவபிஷேகத்தை உடையவனுமான
இராமன் - இராமபிரான்

விளக்க உரை

ஏக காலத்தில் ஆயிரஞாயிறு உதித்தாற்போல் கண்கொண்டு காணவொண்ணாதபடி ஜ்வலியாநின்ற கிரீடத்தையுடையவனாய் மஹாநுபாவனான சக்கரவர்த்தித் திருமகன் எழுந்தருளியிருக்குமிடம் யாது? என்று தேடுகின்றமை முன்னடிகளால் பெறப்படும். வீரத்தண்டையை அணிந்துள்ள கால்களையும் தோள்மிடுக்கையுமுடையவனாய் ப்ரஹ்லாதாழ்வானை நலிந்து வருந்தின ஹிரண்ய கசிபுவின் உயிரை முடிப்பதற்கான நரஸிம்ம ரூபியாய்த் தூணில் தோன்றி, அவ்வாஸுரனது மார்பை இரு துண்டமாகப் பிளந்து ரத்த தாரையைப் பெருக்கி அதிலே தோய்ந்த கையுந்தானுமாய் நின்ற நிலைமையில் எம்பெருமானைக் கண்டாருண்டு என்று விடையளிக்கின்றமை பின்னடிகளாற் பெறப்படும். இதனால் இராமனாய் அவதரித்ததும் நரஸிம்ஹமாய் அவதரித்து மெல்லாம் ஒரு ஈச்வர வ்யக்தியேயென்று தர்மியின் ஐக்கியத்தைக் கூறியவாறாம்; மேலிற்பாட்டுக்களிலுமிங்ஙனமே கொள்க. “கார்யாநுகுணமாகக் கொண்ட ரூபபேதமாத்ரமேயாய், ப்ரகாரி ஒன்றேயாகையாலே, இந்த ஐக்யமறிந்து காண்கையாயிற்று, உள்ளபடி காண்கையாவது” என்ற ஜீயருரை இங்கு அறியற்பாற்று.

English Translation

Are you in search of the abode of Rama of peerless fame and a tall crown that shines like the light of a thousand suns? There are many who saw him with blood-dripping claws when he came as a man-lion and tore the mighty Asura Hiranya’s chest.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்