விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தெய்வங்காள்! என் செய்கேன்?*  ஓர் இரவு ஏழ் ஊழி ஆய்* 
    மெய் வந்து நின்று*  எனது ஆவி மெலிவிக்கும்,* 
    கைவந்த சக்கரத்து*  என் கண்ணனும் வாரானால்* 
    தைவந்த தண் தென்றல்*  வெம் சுடரில் தான் அடுமே* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தெய்வங்காள் - தெய்வங்களே!
ஓர் இரவு- ஒரு இராப்பொழுதானது
ஏழி ஊழி ஆய் - ஏழு சல்பசாலமாய்க்கொண்டு
மெய்- மெய்யே
வந்து நின்று - முன்னே வந்து நின்று

விளக்க உரை

(தெய்வங்காளென் செய்கேன்.) தென்றளோ நலியாகின்றது. கண்ணனோ வருகின்றிலன் , என் செய்வேனென்று மீண்டும் தெய்வங்களையே நோக்கி முறையிடுகின்றான். ஓரிரவு ஏழுழியாய் = ஸௌபரி போகத்துக்காகப் பல வடிவுகள் கொண்டாப்போல இரவு கலிவதற்காப் பல வடிவுகள் கொள்ளா நின்றதுபோலும். மெய் வந்து நின்ற எனதாவிமெலிவிக்கும்- இராவணன் இடம் பார்த்து வந்து நலிந்தாப்போலே இதுவும் விரஹதாசையறிந்துணந்து ஹிம்ஸிக்கின்றது. இவ்விடத்து ஈட்டில், “மோர்க் குழம்பு கொடுத்துத் தேற்றி விடுநகங் கட்டி நலிவாரைப்போலே” என்கிற ஸ்ரீஸூக்தியுள்ளது. முற்காலத்தில் பெருங்குற்றவாளர்களை முன்கோணங்கட்டியடிக்கும்போது அவர்கள் மிகவும் தணறிப்போனவாறே சிறிது ஸாத்மிக்கும்படி மோர்க்குழம்பு முதலியன கொடுத்துத் தேறுதலுண்டாக்கிப் பிறகு கிட்டிக்கோல் போட்டு ஹிம்ஸிப்பார்கள். அதைச் சொன்னபடி விடுநகர்- கிட்டிக்கோல் கைவந்த- விநேயாமான என்றபடி. ஸதவந்து - தடவுகின்ற என்றபடி.

English Translation

Yea gods! A single night stretches into seven aeons, hanging over my person and thinning my soul, Alas! My Krishna-with-discuss does not come. The cool spring-breeze scorches like fire; what shall I do?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்