விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆர் என்னை ஆராய்வார்?*  அன்னையரும் தோழியரும்* 
    'நீர் என்னே?' என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால்* 
    கார் அன்ன மேனி*  நம் கண்ணனும் வாரானால்* 
    பேர் என்னை மாயாதால்*  வல்வினையேன் பின் நின்றே*.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்னையரும் - தாய்மாரும்
தோழியரும் - தோழிமாரும்
நீர் என்னே என்னாதே - ‘இப்படியும் ஒரு நீர்மையுண்டாவதே!’ என்று என் திறத்தில் இரங்காமல்
நீள் இரவும் - நீண்ட இராமுழுவதும்
துஞ்சவர் - உறங்காநிற்பர்கள்;

விளக்க உரை

(ஆரென்னையாராய்வார்.) துயருறுங்காலத்திலே உதவக்கடவரான அன்னையரும் தோழியாரும் ஆராயாதே கிடக்கின்றார்கள்; அவர்கள் உதவாதபோது வந்து உதவக் கடவனான கண்ணபிரானும் வருகின்றிலன்; இனி என் பெயரே மிக்கிருப்பது என்கிறாள். உலகத்தையெல்லாம் ஆராயப்பிறந்த ஆழ்வார் தமது திருவாக்காலே தம்மைப்பற்றி “ஆரென்னையாராய்வார்” என்னும்படியாவதே! இது ஒரு விலக்ஷணமான நோய்போலும். (அன்னையரும் தோழியரும் இத்யாதி.) இரண்டாமடியில் முதலிலுள்ள நீர் என்பது தலைவியின் வார்த்தையாக இருக்கத்தக்கது. (அதாவது) அன்னையரும் தோழியருமான நீங்கள் (என்னைப் பார்த்து) என்னே என்னாதே- என்ன செய்தி? என்று கூட விசாரிக்காமல், நீளிரவும் துஞ்சுவரால்-; ‘அஞ்சவா’ என்கிற வினைமுற்று படர்க்கையாகையால ‘நீர்’ என்ற முன்னிலைக்குப் பொருந்தாதேயென்று சங்கிக்கக்கூடும்; இதற்காக நம்பின்னை அருளிச் செய்கிறபடி- “துஞ்சுவரென்னுமிது துஞ்சுதிராலென்னுவர்த்தம் பெற்றுக் கிடிக்கிறது என்று சொல்லுவாருமுண்டு” என்று (வடமொழியில் *** என்று படர்க்கையாகச் சொன்னாலும் முன்னிலைப் பொருள் கொள்ளக் குறையில்லாதாப்போலே இங்கும் துஞ்சுவர் என்ற படர்க்கைக்கு, துஞ்சுதிர் என்று முன்னிலைப்பொருள் கொள்ளலாமென்பர் என்றவாறு.)

English Translation

Who inquires of me? My Mother and my sakhis sleep through the night, never asking what happened, My dark-hued Krishna too does not come. Wicked me, my name will tell tales and not let me die!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்