விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திக்கு நிறை புகழாளன்*  தீ வேள்விச் சென்ற நாள்* 
    மிக்க பெரும் சபை நடுவே*  வில் இறுத்தான் மோதிரம் கண்டு*
    ஒக்குமால் அடையாளம்*  அனுமான்! என்று*  உச்சிமேல்- 
    வைத்துக்கொண்டு உகந்தனளால்*  மலர்க்குழலாள் சீதையுமே (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திக்கு - திக்குகளிலே;
நிறை - நிறைந்த;
புகழ் ஆனன் - கீர்த்தியை யுடையவனான ஜநகராஜனுடைய;
தீ வேள்வி - அக்நிகளைக்கொண்டு செய்யும் யாகததில்;
சென்ற - (விசுவ்வாமித்திரருடன்) போன;

விளக்க உரை

மிதிலாநகரத் தரசனான ஜநகமகாராஜன் தன் குலத்துப் பூர்வீகராஜனான தேவராதனிடம் சிவபிரானால் வைக்கப்பட்டிருந்ததொரு பெரிய வலியை வில்லை எடுத்து வளைத்தவனுக்கே தன் மகளான ஸீதையைக் கல்யாணஞ் செய்து கொடுப்பதென்று கந்யாசுல்கம் வைத்திருக்க, வேள்வி முடிந்த விச்வாமித்திரனுடன் மிதிலைக்குச் சென்ற இராமபிரான் அவ்வில்லையெடுத்து வளைக்கத் தொடங்குகையில், முன்னமே ஹரஹரயுத்தத்திற் சிறிது முறிபட்டிருந்த அவ்வித இரண்டு துண்டாக நன்றாய் முறிந்து விழுந்திட்டதென்ற வரலாறு ஒன்றையடிகளில் அடங்கி நிற்கும். தத்துவ ஞானத்தினாலும், பிராக்கிருத விஷயவிரக்தியினாலும், பரவின புகழையுடையவனான ஜநகராஜனது யக்ஜவாடத்திலே விசுவாமித்ர முனிவனோடு கூட எழுந்தருளி அங்கு மஹாஞவாடத்திலே விச்வாமித்ர முனிவனோடு பெருமாளுடைய நாமங்கிதமான திருவாழியைப் பிராட்டி சிரமேற்கொண்டு மகிழ்ந்து சிறிய திருவடியை மெய்யே ராமதூதனாக அறுதியிட்டன ளென்க. “சபைநடுவே” என்றும் பாடம். ஒக்குமால் = ஆல்- அசை. அநுமான்- விளி. ஈற்றடியில், ஆல்- மகிழ்ச்சிக் குறிப்பு. ... (கூ)

English Translation

The Lord, who had come to protect the seer’s fire-sacrifice, broke the bow of the world-famous Janaka in the great assembly of princes. Seeing his ring here, the flower-coiffured Sita exclaimed, “Hanuman! Your proofs are convincing”, then pressed the ring to the top of her head and exulted.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்