விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கடியன் கொடியன்*  நெடிய மால் உலகம் கொண்ட-
    அடியன்*  அறிவு அரு மேனி மாயத்தன்*  ஆகிலும்
    கொடிய என் நெஞ்சம்*  அவன் என்றே கிடக்கும் எல்லே* 
    துடி கொள் இடை மடத் தோழீ!*  அன்னை என் செய்யுமே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கடியன் - தன் காரியத்தில் விரைகின்ற கடுமையையுடையவன்
நெடியமால்- போகத் தொடங்கினால் விலக்க அரிதாம்படி பெரிய மேன்மையையுடையவன்;
உலகம் கொண்ட அடியன் - உலகம் முழுவதையும் தன்னதேயாம்படியளந்து கொண்டதிருவடியை யுடையவன்;
அறிவு அருமேனி மாயத்தான் - நல்லவனோ தீயவனோ என்று விவேகிக்க அரிதாம்படி அழகாலே மயக்கும் மாயத்தையுடையவன்;
கொடியன் - அக்காரியம் தலைக்கட்டினால் திரும்பிப் பாராமல்போகிற கொடியவன்;

விளக்க உரை

(கடியன் கொடியன்) தோழி! நான் சொல்லுகிறபடியே எம்பெருமான் குணசாலியாகவன்றிக்கே நீ சொல்லுகிறபடியே குணஹீநனானாலும் என்னெஞ்சம் அவனையல்லது அறியாது; இவ்விஷயத்தில் நின்றும் என்னை மீட்கைக்காகவன்றோ நீ அவனை குண ஹீந னென்பது; குணஹாநியையிட்டே நான் அவனை விரும்பி மேல்விழுகிறேனாகக் கொள்ளாய்; ஆகவே உன்னுடைய சொல்லுக்கு ஒரு ப்ரயோஜனமில்லைகாண் என்கிறாள். கடியன் = ஸ்வகார்யத்திலே எனவேக முடையவன் என்கை. தனக்கொரு காரியமுண்டானால் தானே வந்து மேல்விழுந்து சடக்கெனக் கலக்குமவன் என்றபடி. கொடியன் = இத்தலையில் நோபுபாராதே பிரியுமவன் என்கை. நெடியமால்- மிகவும் பெரியவன்; அதாவது- கைபுகுந்திருக்கச் செய்தேயும் அளவிட வொண்ணாதபடி யிருக்குமவன் என்கை. இதனுடைய கருத்தாவது- மேல்விழுந்து கலவா நிற்கச் செய்தே பிரியவேணுமென்று நினைப்பன்; அப்படி அவன் நினைத்ததையறிந்து, பிரியலாகாதென்று மடிபிடித்துக் கால்கட்டி விலக்கப்பார்க்கலாமே; அப்படி விலக்குவதற்குக் கூசிநடுங்கி அஞ்சியிருக்கவேண்டும்படி திடீரென்று பரத்வம் பாராட்டியிருப்பவனென்றவாறு. உலகங் கொண்டவடிவன் = பிறருடைமையைத் தனக்காக்க நினைத்தால் பின்னையும் அவர்களுக்கு ஓர் அடியும் சேஷியாதபடிபண்ணி அவர்களைப் பாதாளத்தில் தள்ளுமவன்.

English Translation

O Sister! You have a slender waist, but a frail heart! May be the Lord is selfish, wicked and tar away. May be he is a world-grabber and hard to understand. Pity, my wicked heart still longs for him alone, what can Mother do?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்