விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஊரவர் கவ்வை எரு இட்டு*  அன்னை சொல் நீர் படுத்து* 
    ஈர நெல் வித்தி முளைத்த*  நெஞ்சப் பெருஞ் செய்யுள்*
    பேர் அமர் காதல்*  கடல் புரைய விளைவித்த* 
    கார் அமர் மேனி*  நம் கண்ணன் தோழீ! கடியனே* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தோழீ - தோழியே!
ஊரவர் - ஊராருடைய
கவ்வை - பழமொழிகளை
எரு இட்டு - எரவாக இட்டு
அன்னை சொல் நீர் படுத்து- தாயின் ஹிதசைனமாகிற நீரைப்பாய்ச்சி

விளக்க உரை

(ஊரவர்கவ்வை) தோழியானவள் தலைவியை நோக்கி, ‘அம்மா! ஊரவர் சொல்லும் பழிமொழிகளைநாம் பொருள் படுத்தமாலிருப்பதும் நன்றுதான்; ஆனால் எம்பெருமானால் உனக்கு ஏதேனும் லாபமுண்டாயிருந்தால் ‘ஊரவர் கவ்வை கிடக்கட்டும்’ என்றிருக்கலாம்: எம்பெருமானோ உன்னை ஒரு சக்கக்காகவும் மதிக்கவில்லை; ஊரார் பழி சொல்வதொன்றுதானே மிகுகிறது; ஈரநெஞ்சு இளநெஞ்சு இல்லாதவனான அவனை விட்டிடதலே நலம்’ என்று சொன்னாள். அது கேட்டதலைவி, “தோழீ நீ சொல்லும் வார்த்தையா இது? நன்று சொன்னாய்; எம்பெருமான் எனக்கு என்ன குறை செய்தான், சொல்லிக்காண்” என்றாள். அதற்குத் தோழியானவள் “அம்மா! ஊரவர் எவ்வளவு பழமொழிகள் சொல்லிலும் அவற்றை லக்ஷியம் பண்ணாதபடியான ப்ராவண்யம் உனக்கு இருக்கச் செய்தேயும் இந்நிலையிலும் அவள் வந்து உனக்கு முகங்காட்டவில்லையே! இதைவிட வேறு என்ன குறைவேணும்” என்றாள். அதற்குத் தலைவி ‘அவன் இப்போது வந்து முகங்காட்டாவிட்டாலும், தன்னையொழிய நமக்கு மற்றொன்றால் பொருந்தாதபடி பண்ணினானே! அவனையா பொல்லாதவனென்று சொல்லுகிறது? என்கிறாள்.

English Translation

Sister! The dark-cloud Lord planted seeds of love in my heart. The world's gossip made good manure; my Mother's words poured water over the fields. Now my passion swells like the sea. Tell me, is our Krishna mean?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்