விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மிக்க உலகுகள் தோறும்*  மேவி கண்ணன் திருமூர்த்தி* 
    நக்க பிரானோடு*  அயனும் இந்திரனும் முதலாகத்* 
    தொக்க அமரர் குழாங்கள்*  எங்கும் பரந்தன தொண்டீர்!* 
    ஒக்கத் தொழ கிற்றிராகில்*  கலியுகம் ஒன்றும் இல்லையே*.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நக்கன் பிரானோடு - சிவபிரானும்
அயனும் - பிரமனும்
இந்திரனும் - தேவேந்திரனும்
முதல் ஆக - முதலாக
தொக்க - திரண்ட
அமரர் குழாய்கள் - தேவவர்க்கங்கள்

விளக்க உரை

(மிக்கவுலகுகள்.) நீங்கள் ஆராதிக்கிற தேவதைகளும் எம்பெருமானை ஆச்ரயித்தே தம் பதவிகளைப் பெற்றார்கள்; நீங்களும் அவர்களைப்போலே எம்பெருமானை ஆச்ரயித்துப் பிழையுங்கோளென்கிறார். ***************** ** : (நக்ந:) என்னும் வடசொல் நக்கனெனத் திரிந்து, அரையில் ஆடையில்லாதவனென்று பொருள்படும்; இது சிவபிரானுக்கு வழங்கும் நாமங்களுள் ஒன்றாகும். சிவனும் பிரமனும், இந்திரனும் முதலாகத் திரண்ட தேவஸமூஹங்களானவை கண்ணபிரானான ஸ்ரீமந்நாராயணனுடைய அஸாதாரண விக்ரஹத்தை ஆச்ரயித்து, அதன் பலனாக லோகங்கள்தோறும் பரந்த செல்லமுடையா யிருக்கிறார்கள். அதாவது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதவியிலேயிருக்கின்றார்களென்றவாறு. தொண்டீர்! ஒக்கத் தொழகிற்றிராகில் = தேவதாந்தா சேஷபூதரான நீங்களும் அவர்களைப்போலே எம்பெருமானையே தொழவல்லீர்களாகில், கலியுக மொன்றுமில்லையாகும்; அதாவது - உங்களுக்கு தேவதாந்தர ப்ராவண்யமாகிற நீசத்தனத்திற்கு ஹேதுமான கலியுகதோஷம் தொலையுமென்கை.

English Translation

In all the great worlds, all the dense hordes of gods, even Siva, Brahma, Indra and others stand and worship Krishna, Devotees, if you can join them in loving worship, there shall be nothing of the age of Kali.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்