விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மைத் தகு மா மலர்க்குழலாய்!*  வைதேவீ விண்ணப்பம்* 
    ஒத்த புகழ் வானரக்கோன்*  உடன் இருந்து நினைத் தேட* 
    அத்தகு சீர் அயோத்தியர்கோன்*  அடையாளம் இவை மொழிந்தான்* 
    இத் தகையால் அடையாளம்*  ஈது அவன் கைம் மோதிரமே*    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மை தகு - மைபோல் விளங்குகிற;
மா மலர் - சிறந்த புஷ்பங்களை அணிவதற்கு உரிய;
குழலாய் - கூந்தலையுடையவளே!;
வைதேவி - வைதேஹியே!;
ஒத்த புகழ் - “பெருமாளோடு இன்பத் துன்பங்களை) ஒத்திருக்கப் பெற்றவன்” என்ற கீர்த்தியையுடைய;

விளக்க உரை

பெருமாள் உம்மைத் தேடிக்கொண்டு வரும்போது வழியில் ஸுக்ரீவ மஹாராஜானோடு அக்நிஸாக்ஷிகமாகத் தோழமை பூண்டுகொண்டு அவ்விருவரும் ஒன்றாக விருந்து ஒவ்வொரு திக்குக்குப் பலகோடிக் கணக்கான வானரர்களை உம்மைத் தேடும்படி அனுப்பும்போது ஸுக்ரீவ மஹாராஜன் என்னிடத்தில் விசேஷ அபிமானம் வைதிருப்பதை உணர்ந்து, “இவனாலே நமது காரியம் கைகூடும்” என்று என்னிடத்தில் இராமபிரான் விசேஷகடாக்ஷம் செய்தருளி இவ்வடையாளங்களைச் சொல்லியனுப்பியதனால், இப்படி அடையாளங்களை யான் கூறினேன்; அன்றியும், தனது நாமாங்கிதமான மோதிரத்தையும் கொடுத்தருளினானென்று அநுமான் இராமபிரானுடைய திருவாழியையும் காட்டித் தான் ராமதூதனென்பதை வற்புறுத்திப் பிராட்டியின் ஸந்தேஹகத்தைப் போக்குகின்றனனென்க. முதலடியில் விளி- முன்பிருந்த நிலைமையைப் பற்றியது. ‘வைதேகி’ என்றதனால், தனது உடம்பை உபேஷிப்பவளென்பது விளங்குமென்பர். “நமக்கு இன்பமும் துன்பமும் ஒன்றே” என்று இளையபெருமாள் சொல்ல, அதன் பிறகு பெருமாளுடைய இன்பத் துன்பங்களைத் தன்னதாக நினைத்து வந்தானாதலால், ஸுக்ரீவனை “ஒத்தபுகழ் வானரங்கோன்” என்றது. அத்தகு சீர்- உம்மைப் பிரிந்த பின்பு ஊணும் உறக்கமுமற்றக் கடித்ததும் ஊர்ந்தது மறியாதே ஏதேனும் போக்யபதார்த்தத்தைக் கண்டால் உம்மையே நினைத்து வருந்தாநின்றுள்ள அந்த நிலைக்குத்தக்க அன்பென்னுங் குணத்தையுடையவன் என்று கருத்து. ... ... ... (அ)

English Translation

O dark-flower-coiffured Vaidehi, I submit: With the help of the monkey-king Sugriva of matchless fame, when the Ayodhya king led a party to search for you, he gave these details. And as further proof, here is the ring from his hand.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்