விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆனான் ஆளுடையான் என்று*  அஃதே கொண்டு உகந்துவந்து*
    தானே இன்அருள் செய்து*  என்னை முற்றவும் தான் ஆனான்,* 
    மீன் ஆய் ஆமையும் ஆய்*  நரசிங்கமும் ஆய் குறள் ஆய்,* 
    கான் ஆர் ஏனமும் ஆய்*  கற்கி ஆம் இன்னம் கார் வண்ணனே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மீன் ஆய் ஆமையம் ஆய்நர சிங்கமும் ஆய் குறள் ஆய் - மீனாகவும் ஆமையாகவும் நரசிங்கமாகவும் வானமூர்த்தியாகவும் அவதரித்தும்
கான் ஆர் எனமும் ஆய் இன்னம் - வனவராஹமாய் அவதரித்தும் இவ்வளவுமன்றி
கற்கி ஆம் - கல்கியாக அவதரிக்கப்போகிறவனாயும்
கார்வண்ணன் - காளமேகவண்ணனாயுமிருக்கிற எம்பெருமான்
ஆள் உடையான் ஆனான் என்ற அஃதே கொண்டு - என்னை யடிமைகொண்டவனானான் என்று நான் சொன்ன நன்றி மொழியை பற்றிக்கொண்டு

விளக்க உரை

(ஆனானாளுடையான்.) இப்படி நான் எம்பெருமான் திறத்திலே சிறிது க்ருதஜ்ஞாநுஸந்தானம் பண்ண, இதற்காகவும் அவன் போரத் திருவுள்ளமுவந்து முன்னிம் அதிகமான ஸம்ச்லேஷத்தை என்னளவிலே பண்ணினானென்கிறார். ‘என்றஃதே’ என்றவிடத்து, ‘என்ற அஃதே’ என்று பிரிக்க வேணும்; தொகுத்தல் விகாரம்; ‘என்றவஃதே’ என்றாக வேண்டுமிடத்துத் தொக்கது. ‘எம்பெருமான் என்னை ஆட்கொண்டான்’ என்று நான் நன்றி பாராட்டிச் சொன்னதுண்டு; அவன்தானே நெடுநாள் பண்ணின க்ருஷிபலித்து என்னை அடிமைகொண்ட சிந்தனையொழிய நான் ஒரு க்ருக்ஷி பண்ணிற்றிலேன்; உபகார ஸ்மிருதியாக நான் ‘ஆளுடையனானான்’ என்று ஒரு வார்த்தை சொன்னேனே. இவ்வளவையே எம்பெருமான் பற்றிக்கொண்டு, நான் அபேக்ஷியாதிருக்கத் தானே தன் பேறாக க்ருபையைப் பண்ணிவந்து கலந்தான். என்னை முற்றவும் தானானான்’ என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் பணிப்பர்; (1) உள்ளோடு புறம்போடு வாசி பறக்கலந்தான். (2) எனக்கு ஸக்லவித போக்யமுமானான்.

English Translation

Seeing that he had a faithful servant in me, he came elated. By his own sweet grace, he became one with me. The dark Lord who come as the fish, the furtle, the man-lion, the manikin and the wild boar, shall come again as Kalki too, just see!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்