விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மேலாத் தேவர்களும்*  நிலத் தேவரும் மேவித் தொழும்,* 
    மாலார் வந்து இனநாள்*  அடியேன் மனத்தே மன்னினார்,*
    சேல் ஏய் கண்ணியரும்*  பெரும் செல்வமும் நன்மக்களும்,* 
    மேலாத் தாய் தந்தையும்*  அவரே இனி ஆவாரே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மேல் ஆம் தேவர்களும் - மிகச்சிறந்தவர்களான நித்யஸூரிகளும்
நிலத் தேவர்களும் - இவ்வுலகத்திலுள்ள பக்தர்களும்
மேவி தொழும் - விரும்பி வணங்கிநின்ற
மானார் - எம்பெருமான்
நினநாள் - இப்போதும்

விளக்க உரை

[மேலாத் தேவர்களும்] எம்பெருமான் தன்னை ஆதரிப்பாரில்லாமே என்னை விஷயீகரித்தானல்லன்; பரம விலக்ஷணரானவர்கள் தன்னை அநுபவியா நிற்கச் செய்தேயும் அவர்களிடத்திற் காட்டில் அதிகமான விருப்பத்தை என் பக்கலிலே பண்ணி வந்து என்னுள்ளே புகுந்தானாகையால் அவனையே நான் ஸகலவித போக்யவஸ்துவாகவும் கொண்டேனென்கிறார். மேனாத் தேவர்களென்றது- சுவர்க்கத்திலுள்ள தேவர்களினும் மேம்பட்டவர்களான நித்யஸூரிகளென்றபடி. நிலத்தேவர்-பிராமணர்கள். *** என்பது வடமொழி வழக்கு. ஸ்ரீ வைஷ்ணவர்களை விவக்ஷிப்பதாக்க் கொள்க. “மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழும்” என்ற சொற்சேர்க்கையை நோக்கி நம்பிள்ளையருளிச் செய்யும்படி;- “இளையபெருமாளும் இடக்கை வலக்கையறியாத குரங்குகளும் ஒக்கவடிமை செய்தாப்போலே இரண்டு விபூதியிலுள்ளாரும் ஒருமிடறாகச் சேர்ந்து அடிமை செய்யும் ஸர்வாதிகனானவன்.” என்று இப்படிப்பட்ட எம்பெருமான் “மாகடல் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான்” என்கிறபடியே திருப்பாற்கடலையும் பெரிய பிராட்டியார் திருமுலைத்தடத்தையும் விட்டு இங்கேவந்து நித்யஸம்ஸாரியான என்னெஞ்சிலே ஸ்தாவரப்ரதிஷ்டையாக இருந்தனன்.

English Translation

the Lord worshipped by celestials and monarchs has come this day and occupied my lowly heart. Henceforth he is my Mother, my father, my Children, my wealth, my fish-eyed women and all else.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்