விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அம்மான் ஆழிப்பிரான்*  அவன் எவ் இடத்தான்? யான் ஆர்?,* 
    எம் மா பாவியர்க்கும்*  விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்,* 
    'கைம்மா துன்பு ஒழித்தாய்!'  என்று கைதலைபூசல் இட்டே,* 
    மெய்ம் மால் ஆயொழிந்தேன்*  எம்பிரானும் என் மேலானே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆழி பிரான் அம்மான் அவன் - திருவாழியாழ்வானையுடைய பிரபுவாகிய அவ்வெம்பெருமான்
எளவிடத்தான் - எவ்வளவு பெரியவன்!
யான் ஆர் - நான் எவ்வளவு சிறியவன்; (இப்படியிருக்க)
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று - கஜேந்திராழ்வானது துன்பத்தைத் திரித்தவனே! என்று
கை தலை பூசல் இட்டே - சிரஸ்ஸிலே அஞ்ஜலியைப் பண்ண

விளக்க உரை

(அம்மானாழிப்பிரான்) தம்முடைய சிறுமையையும் அவனுடைய ஒப்புயர்வற்ற பெருமையையும் நோக்குமிடத்து அவனுக்கும் நமக்கும் என்ன சேர்த்தியுண்டு! என்று பிற்காலிக்கவேண்டியிருக்கச் செய்தேயும் அவனுடைய க்ருபாரஸம் கரையழியப் பெருகினபடியாலே ஒரு நீராய்க் கலக்க நேரிட்டது என்கிறார். ஆழிப்பிரான் என்பதற்கு- திருவாழியாழ்வானைக் கையிலேந்திய பெருமாள் என்றும், திருப்பாற்கடலிலே பள்ளிகொண்ட பரமபுருஷன் என்றும் பொருள் கொள்ளலாம். எவ்விடத்தான் என்றது- அவனுடைய பெருமை எப்படிப்பட்டது. வாசாமகோசரமன்றோ என்றபடி. யானார் என்றது- என்னுடைய தாழ்வு பேச்சுக்கு நிலமோ என்றபடி. ஆக முதலடியினால்- எம்பெருமான் முன்னே நிற்பதற்கும் தாம் யோக்யரல்ல; என்பதை நிலையிட்டாராயிற்று. ஆனாலும் ஒரு குறையில்லையென்கிறார் இரண்டாமடியினால் எல்லா வழியாலும் மஹாபாவங்களைப் பண்ணினவர்கள் திறத்திலும் எம்பெருமானுடைய பரமக்ருபை பெருகப்புக்கால் தடையுண்டோ என்கிறார்.

English Translation

The Lord of discus, the over Lord, "Where does he belong, who am I? Simply, calling, "Saviour of the elephant" with hands my over head, I have become his true lover; he too has become mine. However strong the karma, when his grace comes, it shall come, just see!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்