விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்ணபிரானை*  விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை,* 
    நண்ணியும் நண்ணகில்லேன்*  நடுவே ஓர் உடம்பில் இட்டு,* 
    திண்ணம் அழுந்தக் கட்டிப்*  பல செய்வினை வன் கயிற்றால்,* 
    புண்ணை மறையவரிந்து*  என்னைப் போர வைத்தாய் புறமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண்ணபிரானை - ஸ்ரீகிருஷ்ணனான் அவதரித்து மஹோபகாரங்கள் செய்தவனும்
விண்ணோர் கருமாணிக்கத்தை - நித்யஸூரிகளுக்கு ஸேஸ்யமான விலக்ஷணவிக்ரஹத்தையுடையவனும்
அமுதை - அமிருதம்போன்றவனுமான உன்னை
எண்ணியும்- கிட்டியிருக்க செய்தேயும்
நன்னகில்லேன் - கிட்டப்பெறாதார் கணக்கிலேயிராநின்றேன்; (அதற்குக் காரணமேதென்னில்)

விளக்க உரை

(கண்ணபிரானை.) கீழ்ப்பாட்டில் மலினம் என்று பிரஸ்தாவிக்கப்பட்ட ப்ரக்குதிஸம்பந்தத்தைப் பார்க்க அருளிச் செய்கிறாரிதில். மிகவும் ஹேஸ்யமாய் ஜுகுப்ஸிக்கத் தகுந்ததான அந்தப்ரக்ருதி ஸம்பந்தத்தைப் பற்றிப் பேசுவதற்குமுன்னே நெஞ்சுகுளிர பகவத்விஷயத்தைப் பேசுகிறார்- கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தையமுதை என்று. ‘விண்ணோர் கருமாணிக்கத்தை’ யென்பதைமுந்துற அந்வயித்துக்கொள்ள வேணுமென்பது ஆசாரியர்களின் திருவுள்ளம். “ஸ்ரீவைகுண்டரிலயனாய் *அபர்வறுமமரர்களதிபதியாயிருந்துவைத்து ஸர்யபோக்யனாம்படிவந்து வஸுதேக்ருஹே அவதீர்ணனானவுன்னை” என்பது ஆறாயிரப்படியருளிச்செயல். “சூட்டுநன்மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபம் தராநிற்சவேயங்கு, ஓர்மாயையினாலீட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போந்து” (திருவிருத்தம்) என்றகிறபடியே விண்ணோர்களை வஞ்சித்துவந்து கண்ணபிரானாகத் திருவவதரித்து, அப்போதைய அதிமாநுஷசீலவ்ருந்த வேஷன்களையெல்லாம் ப்ரத்யக்ஷமாநாகாரமாக எனக்கு ஸேவை ஸாதிப்பித்து ஆராவமுதமாயிருக்குமெம்பெருமானை என்றபடி.

English Translation

O Krishna, Lord-of-celesitals, dark-gem, ambrosia! delight I have reached you, yet not attained you; between us you have placed a body, tied me to it securely with strong cords of karma, plastered the wound neatly, and cast me out into this deceptive wide world.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்