விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உறுவது ஆவது எத்தேவும்*  எவ் உலகங்களும் மற்றும்தன்பால்,* 
    மறு இல் மூர்த்தியோடு ஒத்து*  இத்தனையும் நின்றவண்ணம் நிற்கவே,* 
    செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு*  திருக்குருகூர் அதனுள்* 
    குறிய மாண் உரு ஆகிய*  நீள் குடக் கூத்தனுக்கு ஆள் செய்வதே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எத்தேவும் - எல்லாத் தேவதைகளும்
எ உலகங்களும் - எல்லாவுலகங்களும்
மற்றும் - மற்றுமுண்டான சேதநர தேசனங்களுமாகிய
இத்தனையும் - இவையடங்கலும்
தன் பால் - தன்னுடையதான

விளக்க உரை

தன் ஐச்வர்யத்தில் ஒன்றும் குறையாமல் திருநகரியில் வந்து நின்றருளின பொலிந்து நின்ற பிரானுக்கு அடிமைசெய்கைதானே ஸ்வரூபாநுரூபமென்கிறார். பாட்டினடியிலுள்ள உறுதாவது என்பதை, முடிவிலுள்ள ஆட்செய்வதே என்பதனோடு கூட்டுக; ஆட்செய்வதே உறுவதாவது என்றபடி. எத்தேவும் எவ்வுலகங்களும் மற்றும் இத்தனையும் தன்பால் மறுவில் முர்த்தியோடொத்து இத்யாதி. இந்திரன் சந்திரன் குபேரன் என்று சொல்லப்படுகிற ஸகல தேவதாவர்க்கமும், ஸமஸ்த லோகங்களும், மற்றுமுண்டான சேதநாசேதவர்க்கமுமான இவையாகப் பெற்ற எம்பெருமான் திருக்குருகூரிலே நின்றருளிகிறானாகையாலே அவனுக்கு ஆட்செய்வதே உறுவது என்றபடி. மறுவின்மூர்த்தி யென்பதற்கு இரண்டுவகையாகப் பொருள் கூறுவர்; மறு என்று ஸ்ரீவத்ஸத்திற்கும் பெயராகையாலே அதனையுடைத்தான திருமேனி; (அல்லது) மறு என்று அவத்யமாய், அஃதில்லாத (ஹேயப்ரத்யநீகமான) திருமேனியென்னுதல். எவ்வுலகங்களும் மற்றும் தன்னுடைய மூர்த்தியோடொத்திருக்கையாவது என்னெனில்; சரீரத்தினுடைய லக்ஷணம் இன்னதென்று அறிந்தால் இது அறிந்ததாகும்; …-யஸ்ய சேதநஸ்ய யத் த்ரவ்யம ஸர்வாத்மநா ஸவார்ததே நியந்தும் தாரயிதுஞ்ச சக்யம் தசசேஷதைகஸ்வரூபஞ்சஇ தத் தஸ்ய சரீரம்.* என்பது சரீர லக்ஷயம். ஆத்மாவுக்கு ஸகலப்ரகாரங்களாலும நியாம்யமாய் ஸேஷப்பட்டிருக்கையே சரீரத்வமாதலால் ஸகல தேவதைகளும் எம்பெருமானுக்கு இங்ஙனேயிருக்கும்படியைச் சொன்னவாறு.

English Translation

He contains within his faultless frame all gods, all worlds and all else. He resides in fertile Kurugur where paddy and sugarcane grow tall. He came as a manikin, he danced with an arracy of pots. Service to him alone is fit and proper

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்