விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும்*  யாதும் இல்லா 
    அன்று,*  நான்முகன் தன்னொடு*  தேவர் உலகோடு உயிர் படைத்தான்,* 
    குன்றம்போல் மணிமாடம் நீடு*   திருக்குருகூர் அதனுள்,* 
    நின்ற ஆதிப்பிரான் நிற்க*  மற்றைத் தெய்வம் நாடுதிரே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேவும் - தேவர்களும்
உலகும் - அவர்களுக்கிருப்பிடமான உலகங்களும்
உயிரும் - மனிதர் முதலிய பிராணிகளும்
மற்றும் யாதும் - மற்றுமுள்ள எல்லாமும்
ஒன்றும் இல்லா அன்று - சிறிதுமில்லாத அந்த ஊழிக்காலத்திலே

விளக்க உரை

ஸகலஜகத்காரணபூதனான ஸர்வேச்வரன் திருநகரியிலே எளியனாய்க் காட்;சி தந்தருளாநிற்க, வேறுதெய்வத்தைத் தேடி யோடுகிறீர்களே! இது என்ன அறிவு கேடு! என்று வெறுக்கிறார். எம்பெருமானுடைய ஜகத்காரணத்வத்தை மூதலிப்பன முன்னடிகள். ஒன்றும் என்பதை மேலுள்ள தேவும் இத்யாதிகளுக்கு விசேஷணமாக அந்வயிப்பதும், “தேவுமுலகு முயிரும் மற்றம்யாதும் ஒன்றும் இல்லாவன்று” என்று அந்வயித்து உரைப்பதும் பொருந்தும். விசேஷணமாக அந்வயிப்பதனால், ஒன்றுதல்-பொருந்துதலாய், அதாவது லயிப்பதாய், என்கிறபடியே, கார்யத்திற்குக் காரணத்திலே லயமாகச் சொல்லுகையாலே காரண பூதனான தன்பக்கலிலே சென்று ஒன்றுகிற (அதாவது, லயமடைகிற) தேவும்-தேவஜாதியும், உலகும்-அத்தேவர்களின் இருப்பிடங்களும், உயிரும்-மனிசர் முதலிய பிராணிவர்க்கமும், இப்படி பிரித்துப் பிரித்துச் சொல்லவேண்டாதபடி எதுவுமே இல்லாமலிருந்த ஊழிகாலத்திலே முந்துற முன்னம் நான்முகனைப்படைத்து, அவன் வழியாக தேவஜாதியையும் அவர்களுக்கு இருப்பிடமான லோகங்களையும் இவ்வருகே சேதநவர்க்கங்களையும் ஸ்ருஷ்டித்தானாயிற் எம்பெருமான் என்றுகொள்க. இங்கே நம்பிள்ளையீட்டில் விநோமாக அருளிச்செய்வதொரு ஸ்ரீஸூக்திகாண்மின்;-“ஸர்வேச்வரன் சதுர்முகனை ஸ்ருஷ்டித்தான்; சதுர்முகன் பஞ்சமுகனை ஸ்ருஷ்டித்தான்; ஆக இதுதான் பஹூமுகமாயிற்றுக் காணும்.”

English Translation

Then when none of the gods, worlds, beings, and aught else existed, H made Brahma, -with him the gods, worlds and all the beings. He stands as Adipiran, in fair kurugur where jewelled houses rise like mountains; then what other god do you seek?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்