விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாங்கு நீர் மலர் உலகில்*  நிற்பனவும் திரிவனவும்,* 
    ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்புப்*  பிணி மூப்பால் தகர்ப்புண்ணும்,* 
    ஈங்கு இதன்மேல் வெம் நரகம்*  இவை என்ன உலகு இயற்கை?* 
    வாங்கு எனை நீ மணிவண்ணா!*  அடியேனை மறுக்கேலே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீர் - நீரிலே
மலர் - மலர்ந்த
நிற்பனவும் - ஸ்தாவரங்களும்
திரிவனவும் - ஜங்கமங்களுமான
ஆங்கு - அவ்வவ்விடங்களிலுள்ள

விளக்க உரை

பிறப்பது மிறப்பதுமாய் நோவுபட்டுத்திரிகிற இந்த ஸம்ஸாரிக்ள நடுவில்நின்றும்இ இத்துன்பம் நடையாடாத தேசவிசேஷத்திலே யென்னையழைத்துக் கொண்டருள வேணுமென்கிறார். வாங்கு நீர்மலருலகில் என்பதற்கு இரண்டுபடியாகப் பொருள் கூறுவர்; (வாங்குதல் சூழ்தலாய்) நீர்வாங்கு-கடல்சூழ்ந்த, மலர்-விஸ்தீர்ணமான, உலகில், என்று ஒரு பொருள். மற்றொருபொருளாவது, காரியப் பொருள்களுக்கெல்லாம் காரணப் பொருளிலேயே லயமாகையாலேயே, முழு முதற்காரணமான நீரிலேயே காரியப் பொருள்களெல்லாம் லயமடைய வேண்டுகையாலும், மீண்டும் அதிலிருந்தே உத்பத்தியாகவேண்டுகையாலும், வாங்கும் நீர்-காரியப் பொருள்களையெல்லாம் தன்னிடத்தே சுருக்கிக்கொள்ளுமதான நீரில்நின்று, மலர்-மறுபடியும் உத்பவித்த, உலகில்; என்பதாம். இப்படிப்பட்ட வுலகத்திலே ஸ்தாவரஜங்கமாத்மகங்களான ஸகலப்ராணிகளும் அநுபவிக்கும் துயரங்கள் கண்கொண்டு காணவொண்ணாதவை; இதற்குமேல் கும்பீபாகம் முதலிய நகரங்களில் படும் யாதனைகளும் அளவிலாதவை; “நாமடித்தென்னையனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன்தமர்கள்” என்றும், “நமன்தமர்பற்றி நலிந்திட்டு இந்த ஊனே புகேயென்று மோதும்போது” என்றும், நயன்தமர்பற்றி யெற்றிவைத்து எரியெழுகின்ற செம்பினாலியன்ற பாவையைப் பாவீதழுவென மொழிவதற்கஞ்சி” என்றும் மஹான்கள் கூறுவர்கள். இவையெல்லாம் படும்படியாயோ என்னை நீ இங்கு வைத்திருக்கின்றது? அந்தோ! இப்படியென்னைக் கலங்கப்பண்ணாதே சடக்கென திருவடி சேர்த்துக் கொள்ளவேணும்.

English Translation

In the world that blossomed from the deluge waters, all beings suffer the pain of birth, death, disease and age, and after that, hell; what ways are these? Gem-hued Lord, pray do not forsake me, take me to you

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்