விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொண்டாட்டும் குலம் புனைவும்*  தமர் உற்றார் விழு நிதியும்,* 
    வண்டு ஆர் பூங் குழலாளும்,*  மனை ஒழிய உயிர் மாய்தல்,* 
    கண்டு ஆற்றேன் உலகு இயற்கை*  கடல்வண்ணா! அடியேனைப்* 
    பண்டேபோல் கருதாது*  உன் அடிக்கே கூய்ப் பணிக்கொள்ளே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கொண்டாட்டும் - (புதிதாகச் சிலர்ஏறிட்டுச்செய்கிற) கொண்டாட்டமும்
குலம் புனைவும் - இல்லாத குலத்தை ஏறிட்டுக்கொண்டு அஹங்கரிப்பதும்
தமர் - தாயாதிகளும்
உற்றர் - உறவினரும்
விழு நிதியும் - அளவற்ற செல்லமும்

விளக்க உரை

இப்பாசுரத்திற்கு ஈடு முப்பத்தயறயிரப்படி ஸ்ரீஸீக்திகள் இன்சுவையே வடிவெடுத்தவை. ஆசார்யர்களுக்கு சாஸ்த்ரார்த்த சிகூரிணங்களிற்போலவே லோகரிதி வர்ணநங்களிலும் வல்லமை வியக்கத்தக்கதென்று அஸ்மதாசார்யரான அழகிய மணவாளச்சீயர் அருளிச்செய்யும்படி. கொண்டாட்டும் முன்பு இன்னானென்று தெரிந்துகொள்ள முடியாதபடி அபதார்த்தமாய்க் கிடந்கவொருவன் நாலுகாசு கைப்பட்டவாறே நாலுபேர்களால் கொண்டாடப்படுவனும்; அப்படிப்பட்ட கொண்டாட்டமும். குலம்புனைவும் நாலுபேர்கள் கொண்டாடத் தொடங்கினபோதே தாம் அநாதியாகவே பெரிய நற்குடிபபிறபுடையார் என்ற காட்டிக்கொள்வதற்காக ‘இன்ன திருவம்சம்’ என்று ஏறிட்டுக்கொள்ளப் புகுவர்களாம்; அங்ஙனே யொரு குலத்தைத் தொடுத்துக் கொள்வதும். தமர்-ஏற்கனவே தாயாதிகளாயிருந்தாலுங்கூட ‘இவனுடைய தாயாதியாக நம்மைச் சொல்லிக்கொள்வது நமக்கு நிறக்கேடு’ என்று விட்டுத் தொலைவர்கள்; அப்படி விடப்பட்டவன்தானே சிறிது செல்வம் பெற்றவாறே தாயாதிகளல்லாதாருங்கூட ‘இவனுடைய ஞாதிகளாக நம்மைச் சொல்லிக்கொள்ளுதல் நமக்கு மேன்மை என்று நினைத்து ‘இவரும் நாங்களும் ஒரே குடும்பம்’ என்று சொல்லி அணுகிப் போருவர்கள்.

English Translation

Gaity, friendship, kith and kin, bountiful wealth, flower-tressed women and household, -they all depart at death, O Lord of ocean-hue, I cannot bear this world, what ways are these? Do not treat me as in the past; pray call me to your service, quick!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்