விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நண்ணாதார் முறுவலிப்ப*  நல் உற்றார் கரைந்து ஏங்க,* 
    எண் ஆராத் துயர் விளைக்கும்*  இவை என்ன உலகு இயற்கை?,* 
    கண்ணாளா! கடல் கடைந்தாய்!*  உன கழற்கே வரும் பரிசு,* 
    தண்ணாவாது அடியேனைப்*  பணி கண்டாய் சாமாறே. (2)        

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண்ணதார் - பகைவர்கள்
முறுவலிப்ப - மகிழ்ந்து சிரிக்கவும்
நல் உற்றார் - நல்ல உறவினர்கள்
தரைந்து ஏங்க - மனமுருகிவருந்தவும்
எண்ஆரா துயர் விளைக்கும் - எண்ணமுடியாத துன்பங்களை விளைக்கின்ற வையான

விளக்க உரை

எம்பெருமானே! ஸர்வரக்ஷண ஸமர்த்தனாய் ஸர்வநிர்வாஹகனாய் நீ யிருக்க, இந்த ஸம்ஸாரிகள் அளவுகடந்த துயரங்களை யநுபவித்துத்கொண்டிருக்குமிருப்பு கண்டு என்னால் பொருத்திருக்க முடியவில்லை; இவர்களுடைய ஆர்த்தியைத் தீர்ப்பதோ, அன்றி இவர்களுடைய இழவை நான் சிந்திக்கவொண்ணாதபடி என்னை முடிப்பதோ செய்யவேணும் என்கிறார். உலகத்தில் ஒவ்வொருவர்க்கும் பகைவர் என்று சிலரும் நண்பர் என்று சிலரும் நண்பா சிலரும் இருப்பர்களே; ஒருவனுக்கு ஒர் ஆபத்து நேர்ந்தால் ‘அந்தோ! நேர்ந்ததே!’ என்று அனைவரும் கூடி வயிறு பிடிக்கவேண்டியிருக்க, சிலர் உகந்து சிரிக்கும்படியும் சிலர் வருந்தும்படியுமாவதே! என்று லோகயாத்திரைக்கு வருந்துகிறராழ்வார், இங்கு ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்;-“ஒருவனுக்கு ஒர் அநர்த்தம் வந்தவாறே அற்றைக்கு முன்பு வெற்றிலே தின்றறியார்களேயாகிலும் அன்றாக ஒரு வெற்றிலே தேடித்தின்பது, ஒர் உடுப்பவாங்கியுடுப்பது, சிரிப்பதாகா நிற்பர்களாயிற்று.” எண்ணாராத் துயர்விளைக்குமிவை-நண்ணாதார் முறுவலிப்பதும் நல்லுற்றார் கரைந்து எங்குவதுமாகிய எல்லாம் ஆழ்வார்க்கு எண்ணராத் துயரமாகத் தோற்றாநின்றது. எல்லாரும் எம்பெருமானையே பரமபந்துவாகக் கொண்டு அவனுக்கு ஒரு துன்பம் வந்தால் கரைந்தேங்கவும், அவனுக்கு இன்பம் மிகுந்தால் குதுகலிக்கவும் ப்ராப்தமாயிருக்க, ஆபாஸபந்துக்களுக்காகச் சிலர்வயிறு பிடிப்பதும்இ பகைமை பாராட்டிச் சிலர்முறுவலிப்பதும் ஆழ்வார்க்கு அஸஹ்யமாயிருக்கிறது.

English Translation

Strangers laugh and good frieds weep, over countless miseries the world heaps; what ways are these? Lord with beautiful eyes who churned the ocean! Show me quick the path to your feet, or give me death

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்