விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உயிரினால் குறைவு இல்லா*  உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி,* 
    தயிர் வெண்ணெய் உண்டானைத்,*  தடம் குருகூர்ச் சடகோபன்,* 
    செயிர் இல் சொல் இசைமாலை*  ஆயிரத்துள் இப்பத்தால்* 
    வயிரம்சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே. (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உயிரினால் குறைவு இல்லா - எண்ணிறந்த ஆத்மாக்களையுடைய
ஏழ் உலகு - ஸமந்த லோகங்களையும்
தன்னுள்; ஒடுக்கி - தன்னுடைய ஸங்கல்பத்திலே யடக்கிவைத்து
தயிர் வெண்ணெய் உண்டானை - தயிரும் வெண்ணெயும் அமுது செய்தவனான எம்பெருமான் விஷயமாக

விளக்க உரை

(உயிரினால் குறைவில்லா.) இருள் தருமாஞாலத்தில் பிறப்பையறுத்துப் பரமபதம் பெறுதற்கு இத்திருவாய்மொழி ஸாதனமாயிருக்குமென்று பயலுரைத்துத் தலைக்கட்டுகிறது. உயிரினால் குறைவில்லா என்றது ஒரு ஜீவாத்மாதவும் தப்பாதபடி என்றவாறு. “நெற்றி மேற்கண்ணாலும் நிறைமொழிவாய் நான்முதனும் நீண்ட நால்வாய்இ ஒற்றைக்கை வெண்பகட்டிலொருவனையு முள்ளிட்டவமரரோடும்இ வெற்றிப்போர்க்கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கியய்யக்கொண்ட” என்றும்இ “மண்னாமல் தான் விழுங்கி யுய்யக் கொண்ட” என்றும் திருமங்கையாழ்வாரருளிச் செய்தபடியே இந்திரன் பிரமனீசனென்றிவர்களில் ஒருவரும் தப்பாமல் என்றதாயிற்று. உலகேழ் தன்னுள்ளொடுக்கித் தயிர்வெண்ணெயுண்டானை = இங்கே நம்பிள்ளையீடு காண்மின்;-“தயிரும் வெண்ணெயும் மகளமமுவுகாண்ப்புகுகிறபோது ‘செருப்பு வைத்துத் திருவடி தொழுவாரைப்போலே அந்யபரதைக்கு உடலாகவொண்ணது’ என்று எல்லாலோகங்களுக்கும் வேண்டும் ஸம்விதானம் தன் ஸங்கல்பத்தாலே செய்து பின்னையாயிற்று வெண்ணெயமுதுசெய்தது.” என்பதாம். “உலகேழ் தன்னுள் ஒடுக்கித் தயிர்வெண்ணெயுண்டான்” என்கிற சொற்செறிவின் அழகை நோக்கி நம்பிள்ளை இங்ஙனே யருளிச்செய்தது இன்சுவைமிக்கது. காலில் செருப்போடே கோவிலுக்குச் செல்பவர்கள் கோபுரவாசற்புடையிலே செருப்பை விட்டிட்டு உள்ளேபுகுந்து பெருமாளை ஸேவிக்குமளவிலும செருப்பிலே நினைவு இடையறாமல் செல்லுகின்றபடியாலே “ஸ்வாமிந்! தீர்த்தம் ஸாதிக்க, திருத்துழாய்ஸாதிக்க” என்னவேண்டும்போதும் ‘செருப்புஸாதிக்க’ என்பர்களாம்; எம்பெருமானும் உலங்களுக்குச் செய்யவேண்டிய ஸம்விதானங்களைச் செய்யாமல் நெய் தயிர் வெண்ணெய் களவுகாணப்புகந்தால் இடையிடையே அந்த உலகநினைவும் உண்டாகி, செருப்பை வைத்துத் திருவடிதொழுத கதையாக ஆய்விடுமென்றெண்ணி, எல்லா லோகங்களுக்கும் வேண்டும் ஸம்விதானங்களைத் தன் ஸங்கல்பத்தாலே செய்துமுடித்து அந்யபரதைக்கு இட மறுத்துக்கொண்டு வெண்யெயமுதுசெய்யப் புகுந்நானென்று ரஸோக்தியிருக்கிறபடி. “கர்ப்பிணிகள் வயிற்றில் பிள்ளைக்கீட்டாக போஜநாதிகள் பண்ணுமாபோலே உள்விழுங்கின லோகங்களுக்கு ஜீவனமாகத் தயிர்வெண்ணெயுண்டான்” என்ற ஈட்டு ஸ்ரீஸூக்தியும் பரமபோக்யம்.

English Translation

This decad of the faultless thousand songs on the Lord of the Universe, by Satakopan of kurugur city, is addressed to the Lord who ate curds and butter. Those who can sing it will cut asunder birth and attain Heaven

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்