விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உடம்பினால் குறைவு இல்லா*  உயிர் பிரிந்த மலைத்துண்டம்,* 
    கிடந்தனபோல் துணி பலவா*  அசுரர் குழாம் துணித்து உகந்த,* 
    தடம் புனல சடைமுடியன்*  தனி ஒருகூறு அமர்ந்து உறையும்,* 
    உடம்பு உடையான் கவராத*  உயிரினால் குறைவு இலமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உடம்பினால் குறைவு இல்லா - பெரிவுடம்பு படைத்த
அசுரர் குழாம் - அசுரக்சுட்டங்களை
உயிர் பிரிந்த மலை துண்டம் கிடந்தனபோல் - உயிரைவிட்டு நீங்கின பர்வதகண்டங்கள் கிடந்காற்போலே
பல துணி ஆ - பலபல கண்டங்களாம்படி
துணித்து - துண்டித்து

விளக்க உரை

(உடம்பினால் குறைவில்லா.) முன்னடிகளால் எம்பெருமானுடைய விரோதி நிரஸந ஸாமர்ததியம் பேசப்படுகிறது. “உடம்பினால் குறைவில்லா” என்கிற அடைமொழி அசுரர்குழாத்திலே அந்வயிக்கும். “ஊன்மல்கிமோடு பருப்பார்” என்கிறபடி கண்ட பொருள்களையும் தின்று உடம்பை வளர்த்திருப்பர்கள் அசுரர்கள். ஆத்மாவைப் போஷியாதே தேஹபோஷணத்திலேயே நோக்குடையவர்கள் என்றபடி. பண்டொருகாலத்தில் மலைகளெல்லாம் இறகுகளோடு கூடி வானத்திலெழுந்துதிரிந்து நாடுநரங்களுக்கு விநாசங்களை விளைத்திட்டனவென்றும், அப்போது தேவேந்திரன் தனது வஜ்ராயுதத்தினால் அம்மலைகளின் இறகுகளைத் துணித்து வீழ்த்தனன் என்றும் இதிஹாஸங்கள் கூறும். எம்பெருமானால் துணித்து வீழ்த்தப்பட்ட அசுரர்கள் அம்மலைக்களோடு ஒப்பிடத்தக்கவர்களெனக் கொண்டு “உயிர்பித்த மலைத்துண்டம் கிடந்தனபோல்” எனப்பட்டது. “ஸப்ராணனாய்க்கொண்டு ஸஞ்சரித்த பர்வதங்கள் இந்த்ரன் கையில் வஜ்ராயுகத்திலே பல கூறும்படி துணியுண்டு கிடந்தாப்போலே அஸூரவர்க்கத்தைப்பல கூறாம்படி துணித்துகந்தானாயிற்று” என்பது நம்பிள்ளையீடு.

English Translation

With great relish the cut to pieces many huge-bodies Asuras by the clan, and laid them like lifeless rocks; the mat-hair Siva with the torrential Ganga reigns in solitude on his right side. If he does not desire my life, we have nothing to lose

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்