விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அப்பனே! அடல் ஆழியானே,*  ஆழ் கடலைக் கடைந்த 
    துப்பனே,*  உன் தோள்கள் நான்கும்*  கண்டிடக்கூடுங்கொல்? என்று*
    எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு*  ஆவி துவர்ந்து துவர்ந்து,* 
    இப்பொழுதே வந்திடாய் என்று*  ஏழையேன் நோக்குவனே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அப்பனே - உபகாரம் செய்யுமியல்வினனே!
அடல் ஆழியானே- வீரத்தன்மை வாய்ந்த திருவாழியையுடையவனே!
ஆழ் கடலை - ஆழமான கடலை
கடைந்த - கடைந்து அன்பர்கட்கு அமுதமளித்த
துப்பனே  - ஸமர்த்தனே!

விளக்க உரை

பிரமன் முதலானோர்க்கும் காணமுடியாதிருக்கிற உன்னுடைய அழகைக் காண வேணுமென்று ஆசைப்பட்டு ‘இப்பொழுதே வந்திடாய்’ என்று அபேக்ஷித்துஇ நாம் அபேக்ஷித்தபடியே வந்தருள்வன் என்று நம்பிஇ வரும்போதை யழகைக் காணவேணுமென்று பாரித்திருக்கின்றேனே! என்னுடைய சாபல்யத்தை என் சொல்லுவேன்! என்கிறார். அப்பன் என்று உபகாரம் செய்பவனைச் சொல்லுகிறது. நீ முகங்காட்டாதபோதும் உன்னையே சொல்லிக் கூப்பிடும்படியாக இவ்வளவு மஹோபகாரம் பண்ணினவனே! என்றபடி. எனக்கு நீ அருள்செய்ய நினைத்தால் என்னுடைய பாபங்கள் குறுக்கே நிற்கவற்றோ? “எப்போதுங் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்” என்றபடியே என் வினைகளைத் துணிக்க திருக்கையிலே திவ்யாயுதமுண்டே யென்பார் அடலாழியானே! என்கிறார். கையுந் திருவாழியுமான அழகு காண ஆசைப்பட்டன்றோ நான் கூப்பிடுகிறது என்றவாறுமாம். ஆழ்கடலைத் கடைந்த துப்பனே! = உன்னளவிலே பல்லாண்டு பாடாதே உன் திருமேனியை நோவுபடுத்திக் காரியங்கொள்ள நினைப்பார்க்கும் காரியம் செய்து தலைக்கட்டுகின்ற வுனக்கு என்னெதிரேவ்நது நின்று காட்சி தருகைக்குத் திருவுள்ளமுண்டாகாதது என்னோ? ‘நம் உடம்பை நோவுபடுத்துகின்றவர்களுக்குத் தான் நாம் காரியம் செய்யக் கடவோம்’ என்று ஏதேனும் நியமம் கொண்டிருப்பதுண்டோ? “கடலைக்கடைந்த துப்பனே!” என்ற இவ்விடத்தில் விவக்ஷிதமான துப்பாவது -“விண்ணவரமுதுண அமுதில்வரும் பெண்ணமுதுண்ட எம்பெருமானே!” என்கிறபடியே தேவர்களுக்கு உப்புச்சாறு எடுத்துக் கொடுக்கிற வியாஜத்தாலே தான் பெண்ணமுதாகிற ஸ்ரீ மஹாலக்ஷ்மியை லபித்தஸாமர்த்தியம்.

English Translation

My Father, Bearer of the sharp discus, Mighty one who churned the ocean! Will it ever happen that I see you with your four arms? All the time with tears, -my life drying bit by bit, -I keep looking, Lord, come right now to this hapless self

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்