விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    'காண வந்து என் கண்முகப்பே*  தாமரைக்கண் பிறழ,* 
    ஆணி செம்பொன் மேனி எந்தாய்!*  நின்று அருளாய் என்று என்று,* 
    நாணம் இல்லாச் சிறு தகையேன்*  நான் இங்கு அலற்றுவது என்,* 
    பேணி வானோர் காணமாட்டாப்*  பீடு உடை அப்பனையே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வானோர் - பிரமன் முதலிய தேவர்கள்
பேணி - விரும்பியும்
காணமாட்டா - காணமுடியாதபடி
பீடு உடை - பெருமை வாய்ந்த
அப்பனை - ஸ்வாமியை நோக்கி,

விளக்க உரை

பிரமன் முதலிய தேவர்களுக்கும் காணக்கிடைக்காத பெருமானை வடிவழகு காணவிரும்பி வெட்கமுற்று நான் கூப்பிடாநின்றேனே! இதற்கு என்ன பலணுண்டு! என்கிறார். ஆணி செம்பொன் மேனி ஸ்ரீ ஆணிப்பொன்னாவது மாற்றறிதற்குக் கொள்ளும் உயர்தரப்பொன். இதுக்குமேலே மாற்றமில்லை யென்னும்படியான சிறந்த பொன் என்றும் கொல்லுவர். எம்பெருமானுடைய திருமேனி கருமுகில் திருநிறத்ததாயிருக்க, செம்பொன்மேனி என்றது என்? என்னில்; செம்பொன் நிறத்திற்கு உவமையாகக் கூறப்பட்டதன்று: ஸ்ப்ருஹணீயத்தைக்குக் கூற்றினென்க; அதுபோல விரும்பத்தக்க திருமேனி என்றபடி. “… ஸ்ரீப்ரசாஸிதாரம் ஸர்வேஷரம் அணீயாம் ஸமணீயஸாம், ருக்மாபம் ஸ்வப்நதீகம்யம் வித்யாத்து புருஷம்பரம்.” என்றும், “….” என்றுமுள்ள பிரமாணங்களைக்கொண்டும் நிர்வஹிக்கலாம். ஹிரண்யவர்ணையான பிராட்டியின் சேர்க்கையாலுண்டான நிழலீட்டாலே எம்பெருமானும் ஹிரண்மயனாகத் தோற்றலாம். இப்படிப்பட்ட திருமேனி படைத்தவனே! என் கண் முன்னே வந்து நிற்கவேணும்; என்று பலகால் சொல்லியழைக்கின்றேனே! இதற்கு ஒரு பலன் கிடைக்கப்போகிறதோ? மேம்பட்டவர்களாய்ப் பிரசித்தி பெற்றிருக்கின்ற தேவர்களுக்கும் காணக் கிடைக்கமாட்டாத பெருமானைத் தாம் காண ஆசைப்பட்டது வெட்கமில்லையாயின் காரியமென்று காட்டதற்காக நாணமில்லா என்கிறார்.

English Translation

"My Lord of superior golden hue!", "Excellence whom even the gods through penance, cannot see!", thus and thus, I cry shamelessly here. O what use? You do not come before my eyes and show your lotus face. Alas, I am a lowly serf indeed

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்