விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திசைக்கின்றதே இவள் நோய்*  இது மிக்க பெருந் தெய்வம்,* 
    இசைப்பு இன்றி*  நீர் அணங்கு ஆடும் இளந் தெய்வம் அன்று இது,*
    திசைப்பு இன்றியே*  சங்கு சக்கரம் என்று இவள் கேட்க,*  நீர் 
    இசைக்கிற்றிராகில்*  நன்றே இல் பெறும் இது காண்மினே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

(அன்னைமீர்) - தாய்மார்களே!,
திசைக்கின்றதே - நீங்கள் இப்படியும் அறிவு  கெடலாகுமோ?
இவள் நோய் இது - இப்பெண்பிள்ளைக்கு உண்டாகியிருக்கின்ற இந்நோயானது
மிக்க பெரு தெய்வம் - பராத்பரமான தெய்வமடியாக வந்தது;
இசைப்பு இன்றி - தகுதியில்லாதபடி

விளக்க உரை

க்ஷுத்ரதெய்வங்களைக் குறித்துப்பண்ணும் சாந்திகளால் இவளுடைய நோய் போக்கவரிது; எம்பெருமானுடைய லக்ஷ்ணங்களைச் சொல்லில் இவளைப்பெறலாமென்கி றாள். திசைக்கின்றதே என்பது மிக வருந்திச் சொல்வதாகும். இப்படியம் ப்ரமிக்கலாகுமோ ? என்று க்ஷேபிக்கிறபடி. இவள் நோயிது மிக்க பெருந்தெய்வம் = திருவிருத்தத்தில் “வானோர் தலைமகனாம் சீராயின தெய்வநன்னோய் இது” என்றும் “தின்மொழிநோயோ கழிபெருந்தெய்வம்” என்றும் உள்ள பாசுரங்கள் இங்கே அநுஸந்திக்கத்தக்கன. “ ………….. என்கிறபடியே பரதெய்வமான ஸ்ரீமந்நாராயணனாலே உண்டுபண்ணப்பட்ட நோய் இது என்றபடி. நீர்இசைப்பின்றி அணங்காடும் இளந்தெய்வமன்று இது-இசைப்பு-பொருத்தம்: அஃதில்லாமல் நீங்கள் செய்வித்துப்போருகிற வெறியாடல் முதலான தீயசெயல்களுக்கு இலக்கான தெய்வமடியாக வந்த நோயல்ல இது என்றபடி. இசைப்பின்றி யென்பதற்கு ஈடு:-

English Translation

Alas, You have not understood her sickness; a great divinity has possessed her, not some mean god for whom you dance incongruously. Say clearly and sweetly into her ears, "Conch-and-discus", She will immediately recover, just see!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்